இன்னும் 2 ரன் தான் தேவை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை படைக்க காத்திருக்கும் – ரோஹித் கோலி ஜோடி

PAir
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நாளை செப்டம்பர் இரண்டாம் தேதி கண்டி நகரில் நடைபெற உள்ளது. இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியே இந்த தொடரில் இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நேபாள் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் வீழ்த்த காத்திருக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தான் அணியை இந்த போட்டியில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் துவங்க வேண்டும் என இந்திய அணியும் காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. அந்த விவரத்தை தற்போது இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இரண்டு பேட்ஸ்மேன்கள் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பாக 5,000 ரன்களை கடந்த நிகழ்வு ஏழு முறை நடைபெற்றுள்ளது. அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எட்டாவது ஜோடியாக நிகழ்த்த காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஒருவேளை நாளைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வெறும் இரண்டு ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோடியாக 5000 ரன்களை குவித்த எட்டாவது ஜோடி என்ற சாதனையை ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் படைக்க உள்ளனர்.

இதையும் படிங்க : இதனால தான் இவர் லெஜெண்ட் : விராட் – பாபர், அப்ரிடி – பும்ரா ஆகியோரில் சிறந்த வீரர்களை தேர்வு செய்த வாசிம் அக்ரம்

ஒட்டுமொத்தமாக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் இணைந்து 176 இன்னிங்ஸ்களில் 8827 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளனர். அந்த ஜோடி 26 முறை 100 ரன்களையும், 29 முறை 50 ரன்களையும் அடித்துள்ளது. அதே வேளையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 18 முறை 100 ரன்களையும், 15 முறை 50 ரன்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement