
10 அணிகள் பங்கேற்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது நாளை மறுதினம் (மார்ச் 26) ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.
அதன்படி பெரும்பாலான போட்டிகள் மும்பை மைதானத்தில் நடை பெறுவதால் இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் சாதகம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் 5 முறை ஐ.பி.எல் சாம்பியனும், உள்ளூர் அணியாகவும் மும்பை அணி திகழ்வதால் ஏகப்பட்ட சப்போர்ட் அவர்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நீங்கள் அனைவருமே மெகா ஏலத்தை பார்த்திருப்பீர்கள். இந்த முறை மும்பை அணி கொஞ்சம் புதிய அணி. பல வீரர்கள் அணிக்கு புதிதாக வருகை தந்ததால் நிறையபேர் மும்பை மைதானத்தில் விளையாடிய அனுபவம் கிடையாது.
அதனால் மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகம் என்று எல்லாம் நாங்கள் நினைக்கவில்லை. நான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இங்கு விளையாடி இருக்கிறோம். எனவே இதெல்லாம் ஒரு விடயம் கிடையாது மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் நாங்கள் இப்போது மும்பையில் விளையாட உள்ளோம்.
எனவே எங்களுக்கு இந்த மைதானம் சாதகம் என்கிற பேச்சுக்கே இடமே இல்லை என்று ரோஹித் வித்தியாசமான அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இம்முறை ஐபிஎல் தொடருக்கு கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளும் சிறப்பான ஒன்றாக இருப்பதாகவும் இது பி.சி.சி.ஐ எடுத்த அருமையான முடிவு என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : கொல்கத்தா அணியில் இருந்து விலகிய 2 நட்சத்திர வீரர்கள் – மென்டார் டேவிட் ஹஸ்ஸி அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்த ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலாவது தொடக்க லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை எதிர்த்து வரும் மே 27-ந்தேதி அவர்கள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.