கொல்கத்தா அணியில் இருந்து விலகிய 2 நட்சத்திர வீரர்கள் – மென்டார் டேவிட் ஹஸ்ஸி அதிகாரபூர்வ அறிவிப்பு

david-Hussey
- Advertisement -

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது இந்தியாவிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த 15வது சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் வீரர்களின் மெகா ஏலம் என அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி சரியாக முடிவடைந்த நிலையில் தற்போது நாளை மறுதினம் மார்ச் 26-ஆம் தேதி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி துவங்க உள்ளது.

IPL

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த தொடரின் முதல் போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த முதல் போட்டிக்கான சென்னை அணியில் தீபக் சாஹர் மற்றும் மொயின் அலி ஆகியோர் விளையாடாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அணிக்கு ஏற்பட்ட நிலை போன்றே தற்போது கொல்கத்தா அணியை சேர்ந்த இரண்டு நட்சத்திர வீரர்கள் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக அந்த அணியின் மென்டார் டேவிட் ஹஸ்ஸி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

cummins

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட தேசிய அணிக்காக விளையாடுவது தான் முக்கியம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பின்ச் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் அந்த தொடர் முடிவடைந்த பின்னரே ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா வருவார்கள். எனவே அவர்கள் இருவரும் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 20 வயசுலேயே இவரது இந்த அசுர வளர்ச்சி எனக்கு ஆச்சரியமா இருக்கு – இளம்வீரரை பாராட்டிய வாசிம் ஜாபர்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர் அவர்கள் முழு உடற்தகுதியுடன் இந்தியா வந்து கொல்கத்தா அணியை உடன் இணைவார்கள் என்று நம்புவதாக டேவிட் ஹஸ்ஸி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement