20 வயசுலேயே இவரது இந்த அசுர வளர்ச்சி எனக்கு ஆச்சரியமா இருக்கு – இளம்வீரரை பாராட்டிய வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது நாளை மறுதினம் மார்ச் 26-ம் தேதி மும்பையில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் 70 போட்டிகள் கொண்ட இந்த மிகப்பெரிய ஐபிஎல் தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் குறித்த கருத்துக்களையும், பாராட்டுகளையும் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குறித்து அவர் கூறுகையில் : ஒரு இளம் இந்திய வீரராக இந்த இளம் வயதிலேயே அவரது திறமையை வெளிப்படுத்தி ஒரு ஐபிஎல் அணியால் தக்க வைக்கும் அளவிற்கு அவர் தற்போது உயர்ந்துள்ளதை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவிற்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தால் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரராக இருந்தாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்து தக்கவைத்துள்ளது.

jaiswal 1
jaiswal 1 RR

என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கும் பட்சத்தில் அந்த அணிக்கு அது சிறப்பான ஒன்றாக அமையும். மேலும் ரஞ்சி கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் தற்போது ராஜஸ்தான் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டு உள்ளதால் அவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்றியாக வேண்டும் என்பதும் அவர் மீது உள்ளது. அவரை போன்று இன்னும் பல இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக தக்க வைக்கப்பட்டுள்ளனர். அனுபவமில்லாத வீரர்களான இவர்கள் எவ்வாறு வரும் தடைகளையும், நெருக்கடிகளையும் சமாளித்து விளையாட போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் ஆல்-டைம் உலகசாதனையை அசால்ட்டாக உடைத்து ஆண்களுக்கு சவால் விடும் ஆஸி பெண்கள்

மும்பையைச் சேர்ந்த 20 வயதான இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 289 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement