இந்தியாவின் ஆல்-டைம் உலகசாதனையை அசால்ட்டாக உடைத்து ஆண்களுக்கு சவால் விடும் ஆஸி பெண்கள்

Aus Women
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

இந்த உலக கோப்பையில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம் ஆகிய 3 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது. தற்போதைய நிலைமையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைமை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

மிரட்டும் ஆஸ்திரேலியா:
இந்த உலக கோப்பையில் மெக் லென்னிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணி எதிரணிகளை மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் அந்த அணி இதுவரை பங்கேற்ற 6 லீக் போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட அடையாமல் தொடர்ந்து 6 வெற்றிகளை பதிவு செய்து பலமான அணியாக திகழ்கிறது.

Women's World Cup 2022

குறிப்பாக இந்த உலக கோப்பையை நடத்தும் நியூசிலாந்து கூட தனது சொந்த மண்ணில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 தோல்வி அடைந்து திண்டாடி வருகிறது. அதேபோல நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்து கோப்பையை தக்க வைக்க முடியுமா என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியாவும் ஆரம்பம் முதலே தடுமாற்றம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வாழ்வா – சாவா என்ற நிலையில் தத்தளித்து வருகிறது.

- Advertisement -

மாஸ் காட்டும் ஆஸ்திரேலிய பெண்கள்:
ஆனால் மறுபுறம் இந்த உலக கோப்பையில் தனது முதல் லீக் போட்டியிலேயே வலுவான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை பதம் பார்த்த ஆஸ்திரேலியா அதன்பின் பாகிஸ்தானை தோற்கடித்து நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்தது. அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீசை சாய்த்து இந்தியாவை புரட்டி எடுத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி மறுபுறம் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்து தோல்வி அடையாமல் வெற்றிநடை போட்ட தென் ஆப்பிரிக்காவுக்கும் தோல்வியை பரிசளித்தது.

womens

குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த தனது 6-வது லீக் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 272 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மெக் லென்னிங் 130 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட சதம் அடித்து 135* ரன்கள் விளாசி வெற்றி பெறச் செய்தார். இப்போட்டியில் 135 ரன்களை விளாசிய அவர் இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் அதிக ரன்கள், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீராங்கனை போன்ற சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

ஆண்களுக்கு சவால் விடும் உலகசாதனை:
முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 272 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த ஆஸ்திரேலிய மகளிரணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் “தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் தோல்வி அடையாமல் வெற்றிகரமாக சேசிங் செய்த அணி” என்ற இந்திய ஆடவர் அணி படைத்திருந்த உலக சாதனையை உடைத்து மாபெரும் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த சேசிங்கையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக சேசிங் செய்த 18 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிகரமாக சேஸிங் செய்து 18 வெற்றிகளை பெற்று இந்த சாதனை படைத்துள்ளது.

Aus Women

இதற்கு முன் கடந்த 2005-2006 ஆகிய காலகட்டத்தில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இதேபோல் 17 தொடர்ச்சியான போட்டிகளில் வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றி பெற்றதே இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது 15 வருடங்களுக்கு பின் அதை அசால்ட்டாக உடைத்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆடவர் கிரிக்கெட்டுக்கு ஈடு செய்யும் வகையில் விளையாடி வருகிறது.

- Advertisement -

அடுத்தடுத்த வெற்றிகளால் தற்போது இந்த உலக கோப்பையின் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி அரையிறுதி போட்டியை உறுதி செய்துள்ளது. மேலும் ஏற்கனவே 6 மகளிர் உலக கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட்டால் அதிக கோடிகளை சம்பாதித்த டாப் 5 நட்சத்திர வீரர்கள் – இவ்வளவு கோடிகளா?

அப்படிப்பட்ட நிலையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய ஆடவர் அணியின் சாதனையை உடைத்துள்ள மெக் லென்னிங் தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி 7-வது முறையாக மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement