ஐபிஎல் கிரிக்கெட்டால் அதிக கோடிகளை சம்பாதித்த டாப் 5 நட்சத்திர வீரர்கள் – இவ்வளவு கோடிகளா?

IPL
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி வரும் மே 29-ம் தேதி வரை மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL

- Advertisement -

இந்த முறை லக்னோ, குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெற உள்ளதால் வழக்கத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள இந்த தொடரில் 74 போட்டிகள் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் கோடீஸ்வரர்கள்:
கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது என்றே கூறலாம். அதிலும் லக்னோ 7000+ கோடி, குஜராத் 5000+ கோடி என வாயை பிளக்கும் அளவுக்கு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் அணிகளின் விலை பல மடங்கு எகிறியுள்ளது.

IPL

ஐபிஎல் அணிகளை போலவே அதில் விளையாடும் வீரர்களும் லட்சங்கள் முதல் கோடிகள் வரை சம்பாதிக்கின்றனர். குறிப்பாக வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு கோடிகள் கொட்டித் தரப்படுவதால் சமீப காலங்களில் தாய்நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வருடம் லக்னோ அணிக்காக விளையாட 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு இந்திய வீரர் கேஎல் ராகுல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெறும் ஒரு சீசனில் 17 கோடி என்றால் ஆரம்ப முதல் இப்போது வரை இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் எவ்வளவு கோடிகளை சம்பாதித்து இருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். அந்தப் பட்டியலை தான் இப்போது பார்க்க போகிறோம்.

- Advertisement -

1. எம்எஸ் தோனி: ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் இப்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி அந்த அணிக்காக இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அபாரமான கேப்டன்ஷிப், மின்னல்வேக விக்கெட் கீப்பிங், அதிரடியான பினிஷிங் என பல பரிணாமங்களை கொண்ட அவர் 2008 முதல் 2021 வரை சென்னை அணியில் ஒவ்வொரு சீசனிலும் அதிக சம்பளம் வாங்கிய வீரர் ஆவார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 6 கோடி சம்பளத்தை வாங்கி சாதனை படைத்த அவர் கடந்த 4 வருடங்களாக தலா 15 கோடிகளை சம்பளமாக பெற்று வந்தார்.தற்போது 40 வயதை கடந்து விட்டதால் இந்த வருடம் முதல் முறையாக சம்பளத்தை 12 கோடியாக குறைத்துக் கொண்டுள்ள எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 1,64,84,00,000 ரூபாய் அதாவது 164 கோடிகளை சம்பளமாக மட்டுமே பெற்றுள்ளார். அத்தனை கோடிகளை சம்பளமாக வாங்க தகுதியான வீரராகக் கருதப்படும் அவர் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

2. ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையைப் படைத்த ரோகித் சர்மா இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

Ganguly-ipl
IPL MI

இந்த வருடம் 16 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் விளையாட உள்ள அவர் இதுநாள் வரை 1,62,60,000 ரூபாய் அதாவது 162 கோடிகளை சம்பளமாக பெற்று இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

3. விராட் கோலி: கடந்த 2008 முதல் இன்று வரை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒரு வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வரும் விராட் கோலி இந்த வருடமும் அந்த அணிக்காக 15 கோடி சம்பளத்தில் விளையாட உள்ளார்.

Virat

சொல்லப்போனால் கடந்த 4 வருடங்களாக தலா 17 கோடி சம்பளத்தில் விளையாடி வந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இருப்பினும் தற்போது அதிலிருந்து 2 கோடிகளை குறைத்துக்கொண்டுள்ள அவர் 1,58,20,00,000 ரூபாய் அதாவது 158 கோடிக்கும் மேல் இதுநாள் வரை சம்பளமாக வாங்கி இந்த பட்டியலில் 3-ம் இடம் பிடிக்கிறார்.

4. சுரேஷ் ரெய்னா: மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னா இல்லாத ஒரு ஐபிஎல் சாதனைப் பட்டியலா என்பது போல் கடந்த 2008 முதல் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடிய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 2008 – 2021 வரை 1,10,74,00,000 ரூபாய் அதாவது 110 கோடிகளை சம்பளமாக பெற்று இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

raina

இருப்பினும் கடந்த சில வருடங்களாக பார்ம் இன்றி தவித்து வரும் அவரை சென்னை உட்பட எந்த அணியும் வாங்காத காரணத்தால் இந்த வருடம் முதல் முறையாக அவர் ஐபிஎல் தொடரில் விலை போகவில்லை.

5. ஏபி டீ வில்லியர்ஸ்: இந்த பட்டியலில் வெளிநாட்டு வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திரம் ஏபி டிவிலியர்ஸ் 5-வது இடத்தில் உள்ளார். கடந்த 2008 முதல் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நீண்டகாலம் விளையாடினார்.

abd

உலகின் எப்பேர்ப்பட்ட தரமான பவுலர் எவ்வளவு கடினமான பந்து வீசினாலும் அதை லாவகமாக சிக்ஸர் அடிக்கும் அவரை மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் கடந்த வருடம் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றார். மொத்தத்தில் 2008 – 2021 வரை அவர் பங்கேற்ற போட்டிகளின் வாயிலாக 1,02,51,65,000 ரூபாய் அதாவது 100 கோடிக்கும் மேலான பணத்தை சம்பாதித்துள்ளார்.

Advertisement