டக் டக்குனு 3 விக்கெட் விழுந்ததும் கே.எல் ராகுலை வச்சி நான் பண்ண பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ரோஹித் சர்மா பேட்டி

Rohit-Sharma
- Advertisement -

லக்னோ நகரில் அக்டோபர் 29-ஆம் தேதி (இன்று) நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்று அசத்தியுள்ளது.

அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி 87 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் ரோகித் சர்மா பேசுகையில் : முதல் 10 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தவுடன் கே.எல் ராகுலுடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க திட்டமிட்டு இருந்தேன். அந்த வகையில் நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு விளையாடினோம். இதுபோன்ற சவாலான மைதானத்தில் சற்று நின்று விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

போட்டி செல்ல செல்ல பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற மைதானங்களில் இது போன்ற கடினமான சூழலில் விளையாடுவதற்கான அனுபவம் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன். அதனாலே என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. அதோடு இந்த போட்டியில் கே.எல் ராகுலுடன் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இதையும் படிங்க : 230 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இந்திய அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் – ஜாஸ் பட்லர் வருத்தம்

அந்த வகையில் நாங்கள் இருவரும் சிறப்பாகவே விளையாடி இருந்தாலும் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாகவே நினைத்தேன். அதேபோன்று புதுப்பந்தில் இங்கு பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. பந்து பழையதாக மாற மாற சற்று பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. இருந்தாலும் நான் முன்கூட்டியே குறிப்பிட்டது போன்று 20 முதல் 30 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டோம். இருந்தாலும் இறுதியில் அனைவரது சிறப்பான செயல்பாடு காரணமாக நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement