போட்டியில் தோத்ததை விட இதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 50 ஓவர்களின் முடிவு 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. வங்கதேச அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹதி ஹாசன் ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், முகமதுல்லா 77 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Mahmudullah

- Advertisement -

இரண்டாவதாக 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர்பட்டேர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதிவரை பரபரப்பாக நகர்ந்த போட்டியில் கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ரோகித்திற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் துவக்க வீரராக களமிறங்காமல் இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்று கடைசி வரை போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்து தோல்வியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

IND vs BAn Mushfiqar Rahim Shreyas Iyer

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : முதலில் நாங்கள் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த பின்னர் அவர்களை 270 ரன்கள் வரை அடிக்க விட்டது சிறப்பான ஒன்று கிடையாது. பவுலர்கள் இந்த போட்டியில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டனர். பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

முதல் போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டியிலும் சரி பந்துவீச்சில் இதே தவறுதான் ஏற்பட்டது. நிச்சயம் அந்த குறையை சரி செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அதே போன்று பேட்டிங்கிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் போட்டியை வெற்றி பெற 70 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் கிடையாது. அதனை 110 – 120 ரன்களாக மாற்ற வேண்டும்.

இதையும் படிங்க : IND vs BAN : 3ஆவது ஒருநாள் போட்டியில் இருந்து 3 இந்திய வீரர்கள் திடீர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

கிரிக்கெட்டில் எப்போதும் நல்ல பார்ட்னர்ஷிப் தான் அணிக்கு வெற்றியை பெற்றுத்தரும். போட்டியில் வெற்றி பெறும் முக்கியமான கட்டத்தில் செட்டாகி இருக்கும் வீரர் ஆட்டம் இழந்து வெளியேறினால் புதிதாக வரும் வீரருக்கு பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது. நிச்சயம் ஒரு சில இடங்களில் இந்திய அணியின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement