IND vs BAN : 3ஆவது ஒருநாள் போட்டியில் இருந்து 3 இந்திய வீரர்கள் திடீர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

IND vs BAN Rohit Sharma Liton Das
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ் அணியானது அடுத்ததாக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் மூன்று இந்திய வீரர்கள் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் காயம் ஏற்பட்டதன் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

Rohit-Sharma

அதேபோன்று குல்தீப் சென்னும் ஏற்கனவே காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் காயத்தால் அவதிப்படுகிறார்கள். அது எங்களுக்கு உகந்ததல்ல மற்றும் எளிதானதும் அல்ல.

- Advertisement -

ரோகித் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் நிச்சயமாக அடுத்த மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். குல்தீப் சென் ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : தங்களது அடிப்படை விலையை குறைத்துக் கொண்ட 4 நட்சத்திர வீரர்களின் பட்டியல்

ரோஹித்திற்கு கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை சென்று நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்துவார் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement