ஐபிஎல் 2023 ஏலம் : தங்களது அடிப்படை விலையை குறைத்துக் கொண்ட 4 நட்சத்திர வீரர்களின் பட்டியல்

Agarwal
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் அந்த சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். அந்த வகையில் இந்த வருடம் சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் அந்தந்த அணி நிர்வாகங்கள் தக்க வைக்காமல் கழற்றி விட்டுள்ளன..

IPL

- Advertisement -

அதனால் நிலைமையை புரிந்து கொண்ட சில நட்சத்திர வீரர்கள் தங்களது அடிப்படை விலையை குறைத்துக் கொண்டுள்ளார்கள். சொல்லப்போனால் இதுவும் ஒரு வகையான யுக்தி என்றே சொல்லலாம். ஏனெனில் பார்மில் இல்லையென்றாலும் விலையை குறைவாக நிர்ணயிக்கும் போது தரத்தை பார்த்து நிறைய அணிகள் குறைந்த செலவில் வாங்குவதற்கு போட்டி போட்டு கடைசியில் எதிர்பாராத பெரிய தொகைக்கு வாங்க அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் 2023 சீசனுக்காக ஏலத்தில் தங்களது அடிப்படை விலையை குறைத்துக் கொண்டு களமிறங்கும் சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

4. அஜிங்கிய ரஹானே: மும்பையைச் சேர்ந்த இவர் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அசத்தலாக செயல்பட்டு வந்த நிலையில் சமீப காலங்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது போலவே ஐபிஎல் தொடரிலும் பழைய மவுசை இழந்து தவிக்கிறார்.

rahane2

குறிப்பாக முன்பு போல் அதிரடியாக விளையாட முடியாமல் தவிக்கும் இவர் இந்த வருடம் கொல்கத்தா அணியில் 7 போட்டிகளில் 133 ரன்களை வெறும் 103.91 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததால் கழற்றி விடப்பட்டார். அதனால் தன்னுடைய தற்போதைய தரத்தை புரிந்து கொண்ட அவர் 2022 சீசனில் 1 கோடியாக இருந்த தனது அடிப்படை விலையை இம்முறை 50 லட்சமாக குறைத்துள்ளார்

- Advertisement -

3. மனிஷ் பாண்டே: ஆரம்ப காலங்களில் சரவெடியாக விளையாடி ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்த இவர் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்தினார். ஆனால் சமீப காலங்களில் பெரிய ரன்களை குவிக்க தவறும் இவர் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாமல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பின்னடைவை ஏற்படுத்துகிறார்.

Manish Pandey

இந்த வருடம் லக்னோ அணிக்காக 6 போட்டிகளில் 88 ரன்களை 110.00 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் தன்னுடைய தற்போது பார்மை புரிந்து கொண்டு 2022 சீசனில் 1 கோடியாக நிர்ணயித்திருந்த தனது அடிப்படை விலையை 2023 சீசனில் 50 லட்சமாக குறைத்துக் கொண்டுள்ளார்.

- Advertisement -

2. கெய்ல் ஜமீசன்: நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் 2021 டி20 கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2021 சீசனுக்கான ஏலத்தில் இவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி 15 கோடிக்கு வாங்கிய நிலையில் 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 9.60 என்ற சுமாரான எகனாமியில் எடுத்த அவர் பேட்டிங்கில் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

jamieson

அதன் பின் 2022 சீசனில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்க விரும்பாமல் வெளியேறிய அவர் தனது முதல் ஐபிஎல் சீசனில் சுமாராக செயல்பட்டதால் முதல் முறையாக வாங்கப்பட்ட போது 1.5 கோடியாக நிர்ணயித்திருத்த தனது அடிப்படை விலையை இம்முறை 1 கோடியாக குறைத்துக் கொண்டுள்ளார்.

1. மயங் அகர்வால்: கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கடந்த 2019, 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த சீசன்களில் பஞ்சாப் அணிக்காக அதிரடியாக பெரிய ரன்களை குவித்து அற்புதமாக செயல்பட்டார். மேலும் இளம் வீரராக அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் மிகவும் கவரப்பட்ட பஞ்சாப் நிர்வாகம் இந்த வருடம் அவரை 14 கோடிக்கு தக்க வைத்து கேப்டனாக அறிவித்தது.

agarwal 1

ஆனால் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத காரணத்தால் தடுமாறிய அவர் அழுத்தத்தில் பார்மை இழந்து 13 போட்டிகளில் 196 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் வழக்கம் போல பதற்றமடைந்த பஞ்சாப் நிர்வாகம் 2வது வாய்ப்பு கொடுக்காமல் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதுடன் அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விட்டது. இருப்பினும் ஒரு மோசமான சீசனால் தரம் குறைந்து விடாத அவருடைய மவுசு குறையவில்லை என்றாலும் தற்சமயத்தில் தன்னுடைய பார்மை புரிந்து கொண்ட அவர் தனது அடிப்படை விலையை 1 கோடியாக குறைத்துக் கொண்டு இந்த ஏலத்தில் களமிறங்குகிறார்.

Advertisement