ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் ஏன் சேர்க்கப்படவில்லை? – ரோஹித் சர்மா பதில்

Rohit-and-Kuldeep
- Advertisement -

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அந்த அறிவிப்பில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

மேலும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெளியேற்றப்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த வீரர்கள் அணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டியில் குல்தீப் யாதவை ஏன் சேர்க்கவில்லை? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். அதோடு இந்த ஆண்டு மட்டும் 15 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் டீசன்டான ரெக்கார்டை வைத்துள்ளார். இப்படி சிறப்பான பார்மில் இருந்தும் அவரை அணியில் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி ரோகித் சர்மாவிடம் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க : அக்சர் பட்டேலுக்கு பதிலா நியாயப்படி பாத்தா அவருக்கு தான் சேன்ஸ் குடுத்திருக்கனும் – ஹர்பஜன் சிங் கருத்து

அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா கூறுகையில் : குல்தீப் யாதவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட வைத்து அவரின் திட்டங்களை நாங்கள் பெரிய அளவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெளிக்காட்ட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிச்சயம் அவர் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement