அக்சர் பட்டேலுக்கு பதிலா நியாயப்படி பாத்தா அவருக்கு தான் சேன்ஸ் குடுத்திருக்கனும் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan-Singh
Advertisement

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டான அக்சர் பட்டேல் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் போர் சுற்றின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் காயமடைந்தார். இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் பொன்னான வாய்ப்பினையும் அவர் இழந்திருந்தார்.

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வேளையில் அந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்வேளையில் இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் இடம் பெறவில்லை என்றாலும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு மூன்றாவது போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அக்சர் பட்டேல் முதல் இரண்டு போட்டியில் விளையாடாததன் காரணமாக அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை சேர்ப்பதை காட்டிலும் யுஸ்வேந்திர சாஹலை சேர்த்து இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : யுஸ்வேந்திர சாஹல் ஏற்கனவே ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த 4 அணிகளில் ஒன்று தான் 50 ஓவர் உலககோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் – கில்க்ரிஸ்ட் கணிப்பு

எந்த ஒரு வீரருக்கு பதிலாகவும் அவர் அணியில் தேர்வு செய்யப்பட தகுதியான ஒரு வீரர். என்னை பொறுத்தவரை அக்சர் பட்டேலுக்கு பதிலாக அவரே இந்திய அணியில் தேர்வாகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார், இந்திய அணிக்காக இதுவரை 72 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement