இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் இந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள நான்கு அணிகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆடம் கில்கிறிஸ்ட்டிடம் : இந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான நான்கு அணிகள் எது? என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் :
என்னை பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஆணிகள் தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான அணிகள் என்று பதிலளித்து இருந்தார். ஏற்கனவே முன்னாள் வீரர்கள் பலரும் இதே நான்கு அணிகளை சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகள் என்று குறிப்பிட்டிருந்த வேளையில் தற்போது சரியான நான்கு அணிகளை இவரும் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு நாடு திரும்பியுள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு மூன்று (2-3) என்ற கணக்கை இழந்து தற்போது ஒரு சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : தோனி விளையாடுன இடத்தில் நீங்க இப்டி பண்றிங்களே.. 2023 உ.கோ முன் ரவீந்திர ஜடேஜா பற்றி – கம்பீர் கவலையான பேச்சு
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. உலககோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோத இருப்பது ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.