தோனி விளையாடுன இடத்தில் நீங்க இப்டி பண்றிங்களே.. 2023 உ.கோ முன் ரவீந்திர ஜடேஜா பற்றி – கம்பீர் கவலையான பேச்சு

Gautam Gambhir 4
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் கேஎல் ராகுல், பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அந்த நிலைமையை முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை வைத்து எளிதாக சமாளிக்க முடியும் என்றாலும் பேட்டிங்கில் அவர் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் இதே ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் 3 இன்னிங்ஸில் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்ட அவர் பந்து வீச்சில் 4 இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை 4.34 என்ற எக்கனாமியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
இந்நிலையில் பெரும்பாலும் தோனி விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு அதிரடியாக ஃபினிஷிங் செய்த 7வது இடத்தில் உலகக்கோப்பையில் விளையாடக்கூடிய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் தடுமாற்றமாக செயல்படுவது கவலையளிப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த வகையான மைதானத்திலும் அவரால் 10 ஓவர்கள் வீச முடியும் என்பதை நாம் அறிவோம்”

“அதே போல சிறந்த ஃபீல்டராகவும் இருக்கும் அவர் பேட்டிங்கில் 7வது இடத்தில் இன்னும் சற்று அதிகமாக பங்காற்ற வேண்டும். ஏனெனில் நீங்கள் 6 பேட்ஸ்மேன்களுடன் மட்டும் செல்ல முடியாது. ஒருவேளை 5வது இடத்தில் இஷான் கிசான் விளையாடினாலும் கேள்விக்குறிகள் இருக்கும். எனவே ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு கடைசி 10 ஓவரில் 80 – 90 ரன்கள் தேவைப்படும் போது 6, 7 ஆகிய இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் ஒன்றாக பேட்டிங் செய்வார்கள்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜாவிடம் வெற்றி பெற வைக்கும் திறமை இருக்கிறது. ஆனாலும் தரமான பவுலிங்க்கு எதிராக அவரால் சாதிக்க முடியுமா என்பது விவாதமாகவே இருக்கிறது. மேலும் இதுவரை அவர் ஆற்றிய பங்கிற்கு 11 பேர் கொண்ட அணியில் இருப்பதற்கு தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஜடேஜா பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ஃபார்மில் இருந்தால் இந்திய அணி இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்”

இதையும் படிங்க: 12 கருப்பு புள்ளிகள் அபராதம்.. கவுண்டி தொடரில் விளையாட புஜாராவுக்கு இங்கிலாந்து வாரியம் அதிரடி தடை.. நடந்தது என்ன?

“குறிப்பாக சாதாரணமாக அடிப்பதற்கும் அதிரடியாக அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது 10 ஓவர்களில் உங்களுக்கு 90 ரன்கள் தேவைப்பட்டால் நீங்கள் அதில் 40 ரன்கள் அதிரடியாக எடுக்க வேண்டும். அதுவே இந்த ஆசிய கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவிடம் எதிர்பார்த்தும் கிடைக்காத செயல்பாடாகும்” என்று கூறினார்.

Advertisement