- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுல் டிராவிட் கையால் எனக்கு கிடைத்த அந்த அங்கீகாரத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது – ரோஹித் சர்மா பகிர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2024 டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதற்கு அடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவரது தலைமையின் கீழ் 2025 சாம்பியன்ஷிப் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இப்படி அடுத்தடுத்த இரண்டு ஐசிசி கோப்பைகளை ரோகித் சர்மா வென்றதால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் டிராவிட் உடனான பிணைப்பு குறித்து பேசிய ரோஹித் சர்மா :

ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட இருக்கும் அவர் 2027 உலக கோப்பை தொடரில் விளையாடிவிட்டு அதன் பின்னரே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இனி ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறார். அதனால் நிச்சயம் அவரால் 2027 உலக கோப்பை வரை விளையாட முடியும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது கரியரில் நடைபெற்ற ஏகப்பட்ட சம்பவங்கள் குறித்து ரோஹித் சர்மா தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் ராகுல் டிராவிட் உடனான தனது பிணைப்பு குறித்தும் தற்போது ரோகித் சர்மா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ராகுல் டிராவிடுடன் நான் மூன்று ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். பயிற்சியாளராக அவருடைய எளிமையான குணம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை என்னை பெரியதாக ஈர்த்தன. ஏற்கனவே ராகுல் பாய் பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

- Advertisement -

ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் நான் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். குறிப்பாக என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் ராகுல் டிராவிடின் பங்கும் இருக்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு அயர்லாந்தில் நான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானபோது அவர்தான் என்னுடைய கேப்டன். அப்போது அவர்தான் எனக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அறிமுக தொப்பியையும் வழங்கினார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீங்க தேவை..உங்களோட மனசு மாறும்னு நினைக்குறேன் – கோலியின் முடிவு குறித்து லாரா பதிவு

இந்திய அணிக்காக அறிமுகமாகிய அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவரான அவரிடம் இருந்து பெற்ற அந்த அங்கீகாரத்தை இன்றளவும் நினைவில் வைத்து வருகிறேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -