டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீங்க தேவை..உங்களோட மனசு மாறும்னு நினைக்குறேன் – கோலியின் முடிவு குறித்து லாரா பதிவு

Lara and Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த மே 7-ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை : பிரைன் லாரா

இப்படி இவர்களது அடுத்தடுத்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் 36 வயதே ஆன விராட் கோலி ஏன் ஓய்வுபெற வேண்டும்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி முழு உடற்தகுதியுடன் இருப்பதால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-3 ஆண்டுகள் விளையாடக் கூடிய அளவிற்கு தகுதியுடன் இருக்கிறார். எனவே அவர் தற்போது ஓய்வுபெற வேண்டாம் என்றும் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் விராட் கோலி ஓய்வு குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் உங்களது ஓய்வு முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் என விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டது. ஆனாலும் விராட் கோலி இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலையும் வெளிப்படுத்தவில்லை. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணி சறுக்களை சந்தித்திருக்கும் வேளையில் இந்த நேரத்தில் நீங்கள் ஓய்வு பெறக்கூடாது நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கு நீங்கள் தேவை என முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவானான பிரைன் லாரா விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : இதுக்கு பயந்து தான் விராட் கோலி ரிட்டையராகிராறா? வீடியோ போட்டு கலாய்த்த இங்கிலாந்தின் கவுன்டி நிர்வாகம்

டெஸ்ட் கிரிக்கெட்க்கு விராட் கோலி தேவை. அவர் தனது முடிவிலிருந்து வெளியே வர சம்மதிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறக்கூடாது இன்னும் மீதமுள்ள காலங்களில் அவர் 60 ரன்ளுக்கு மேலான பேட்டிங் சராசரியில் நிச்சயம் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையான வார்த்தைகளை பகிர்ந்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement