- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உண்மையிலேயே இந்த முடிவு ஹேப்பி தான்.. 3 ஆவது போட்டி டிராவானதற்கு பின்னர் பேசிய – ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்ற கடைசிநாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் நாளிலிருந்து மழை குறுக்கிட்டு வந்ததன் காரணமாக தற்போது ஐந்தாம் நாள் இன்றும் மழை குறுக்கீடு காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்ததுள்ளது.

இந்த முடிவு கிடைத்ததில் மகிழ்ச்சி :

இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 445 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 260 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது.

இதன் காரணமாக போட்டி மீண்டும் நடைபெறாமல் போனது. இதன் காரணமாக போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் இதுபோன்று மழை பெய்து ஆட்டம் நின்று நின்று துவங்கி விளையாடுவது என்பது சிறப்பான ஒன்று கிடையாது. அதே வேளையில் நாங்கள் அடுத்த போட்டிக்கு முன்னதாக தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் செல்வதால் நிச்சயம் அடுத்து போட்டியில் வெற்றி பெற இந்த முடிவு உத்வேகத்தை தரும்.

இதையும் படிங்க : 775 விக்கெட்ஸ்.. ஓய்வு பெற்ற தமிழ்நாட்டின் இந்திய ஜாம்பவான் அஸ்வின்.. கலங்கிய கண்களுடன் பேட்டி

நான்காவது நாளின் லன்ச்சுக்கு பிறகு யாராவது ஒருவர் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் ஜடேஜா-ராகுல் மற்றும் பும்ரா-ஆகாஷ் தீப் ஆகியோரது ஜோடி இந்திய அணியை பாலோ ஆனிலிருந்து தப்பியது. இறுதியில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது மகிழ்ச்சி என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -