எந்த இடம்னு பாயிண்ட் பண்ணி சொல்ல முடியல.. ஆனா இப்படி தோத்தது ரொம்ப கஷ்டமா இருக்கு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்றுடன் நிறைவுக்கு வந்தது. கடந்த ஜனவரி 25=ஆம் தேதி துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 436 ரன்களை குவித்தது.

இதன் காரணமாக 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 420 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை ருசித்தது. அதோடு மட்டுமின்றி இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தோல்வி ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது? என்று என்னால் ஒரு இடத்தை குறிப்பிட்டு கூற முடியவில்லை. இருப்பினும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற பின்பு இப்படி ஒரு தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணி சார்பாக வெளிநாட்டு வீரராக இங்கு வந்து ஒல்லி போப் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : நம்ம பவுலிங்கை எப்படி ஆடணும்னு அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. இங்கிலாந்து வீரரை பாராட்டிய – அணில் கும்ப்ளே

நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அவர் சூழ்நிலை சமாளித்து அற்புதமாக விளையாடி இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த தோல்வி குறித்து பார்க்கையில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறே தோல்விக்கு காரணம் என ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement