நம்ம பவுலிங்கை எப்படி ஆடணும்னு அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. இங்கிலாந்து வீரரை பாராட்டிய – அணில் கும்ப்ளே

Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் என்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 436 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது நிச்சயம் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின்போது விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஒல்லி போப் ஆட்டத்தையே புரட்டி போட்டுள்ளார்.

இரண்டாவது இன்னிங்சில் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய போப் 278 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகளுடன் 196 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு தற்போது உதவியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே கூறுகையில் : ஒல்லி போப் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடி உள்ளார். இந்தியா போன்ற ஆடுகளங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அவர் ஆடியது போன்று எனக்குத் தெரிந்தது என கும்ப்ளே கூறினார்.

இதையும் படிங்க : 230 ரன்ஸ் வெச்சு.. சொன்னதை செய்த இங்கிலாந்து.. லீட் எடுத்தும் இந்தியா வரலாறு காணாத தோல்வி

அவரது ஆட்டம் காரணமாக தற்போது இந்திய அணிக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் அவரது இந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் ஒரு கட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்ல வேண்டிய இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்றதற்கு காரணமும் அவரது ஆட்டம் தான் என்றும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement