IND vs ENG : ஜெயிச்சது ஓகே தான். ஆனா இந்த தப்பு மட்டும் மாறல – வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா வருத்தம்

Rohith
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியினை கொரோனா பாதிப்பு காரணமாக தவறவிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டும் குணமடைந்து டி20 தொடரில் கேப்டனாக விளையாடி வருகிறார். அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

INDIA IND vs ENG Rohit Sharma

- Advertisement -

அதன்படி நேற்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களையும், தீபக் ஹூடா 33 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

இறுதியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே அடித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். இதன் காரணமாக இந்த முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றியும் பெற்றது.

Bhuvaneswar Kumar IND vs ENg

டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாகவே பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டு வரும் இங்கிலாந்து அணி இந்த இலக்கினை சேசிங் செய்து விடும் என்று பலரும் நினைத்திருக்க இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்த போட்டியில் அருமையான வெற்றியையும் பெற்று கொடுத்தனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா இந்திய வீரர்கள் செய்த தவறை குறிப்பிட்டு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த போட்டியில் அற்புதமாகவே பந்துவீசியது. குறிப்பாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவருமே ஸ்விங் செய்து பந்துகளை வீசினர். ஆனால் தற்போது நாம் பெற்ற வெற்றியை விட நமது பீல்டிங் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் இந்த போட்டியில் பிடிக்கப்பட வேண்டிய பல கேட்ச்களை நாம் தவறவிட்டோம்.

இதையும் படிங்க : IND vs ENG : யுவியின் 12 வருட சாதனையை சமன்செய்த பாண்டியா. வெளியான புள்ளிவிவரம் – பாராட்டும் ரசிகர்கள்

டி20 கிரிக்கெட்டில் இதுபோன்று நிறைய கேட்ச்களை தவறவிடுவது மிகப்பெரிய தவறு. அடுத்து வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என நம்புகிறேன். அதற்காக பயிற்சிகளையும் வீரர்கள் மேற்கொள்ள வேண்டும் என ரோகித் சர்மா கூறினார். அவர் கூறியபடி இந்த போட்டியில் இந்திய வீரர்கள் எளிதான ஐந்து கேட்ச்களை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement