இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 20-ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் இந்திய அணிகள் நிகழப் போகும் மாற்றம் குறித்தும் பேசியுள்ளார்.
அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் : அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்த போட்டியை நாங்கள் வெற்றியுடன் ஆரம்பித்து உள்ளோம். எனவே இந்த வெற்றி கொடுத்த முமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம். இரண்டாவது போட்டியிலும் எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.
அதோடு இந்திய அணிக்கு மீண்டும் வந்துள்ள இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். இரண்டாவது போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என ரோகித் சர்மா குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் அந்த வீரர்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க : என்னோட லட்சியமே அதை செஞ்சுட்டு நம்ம தேசிய கீதத்தை பாடனும் – இந்தியாவின் கேப்டன் ருதுராஜ் பேசியது என்ன?
நிச்சயமாக அந்த இரண்டு வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் மற்றும் ஜெயதேவ் உனட்கட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனை தவிர்த்து அணியில் வேறு இருந்தால் வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழாது என்று நம்பலாம்.