- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லா நேரமும் அவரேவா நம்ம டீமை காப்பாத்துவாரு.. இந்திய வீரர்களை வெளுத்து வாங்கிய – ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு இந்த தொடரையும் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) கணக்கில் சமன் செய்துள்ளது.

அவரை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 16-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தோல்வி குறித்து பல்வேறு விடயங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்த பின்னரே தெரிவித்து இருந்த வேளையில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டி குறித்து யோசிக்கவில்லை.

அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு போட்டியினையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை ஒவ்வொரு போட்டியாகவே யோசிக்க நினைக்கிறோம். மேலும் பும்ரா போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நல்ல விஷயம். ஆனால் வெற்றிக்கு தேவையான அனைத்து வேலையும் அவர் மட்டுமே செய்வார் என்று நினைப்பது தவறு. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் நல்ல முறையில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கின்றனர்.

- Advertisement -

அவர்களைப் போன்று மற்ற அனைவருமே பொறுப்பினை கையில் எடுக்க வேண்டும். பும்ரா மட்டும் எல்லா நேரத்திலும் விக்கெட் எடுப்பார் என்று யோசிக்க கூடாது. இது ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் எனவே அவரது பணிச்சுமையையும் யோசித்தாக வேண்டி இருக்கிறது. அதற்காக ஒவ்வொரு முறையும் நான் பும்ராவிடம் சென்று அவருடைய உடல்நிலை குறித்து பேசி வருகிறேன்.

இதையும் படிங்க : 295 ரன்ஸ் சேசிங்.. 5 வருடம்.. ரூதர்போர்ட் மிரட்டல் சதம்.. வங்கதேசத்தை சாய்த்த வெ.இ.. 11 தோல்விகளை உடைத்து நிம்மதி

இதேபோன்று பேட்ஸ்மேன்களும் ஒரு குறிப்பிட்ட வீரர்கள் மட்டும்தான் ரன் அடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இப்படி ஒன்றிணைந்து விளையாடினால் தான் வெற்றி பெற முடியும் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -