295 ரன்ஸ் சேசிங்.. 5 வருடம்.. ரூதர்போர்ட் மிரட்டல் சதம்.. வங்கதேசத்தை சாய்த்த வெ.இ.. 11 தோல்விகளை உடைத்து நிம்மதி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதை எடுத்து இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 8ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் நகரில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் நேர்த்தியான நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 294-6 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மெஹதி ஹசன் 74, டன்ஜித் ஹசன் 60, அனுபவ வீரர் முகமதுல்லா 50*, ஜாகிர் அலி 48 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

ரூதர்போர்ட் மிரட்டல் சதம்:

வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2, ரோமாரியா செபார்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 295 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் 9, எவின் லெவிஸ் 16, கேசி கார்ட்டி 21 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் சாய் ஹோப் மற்றும் செர்ஃபான் ரூத்தர்போர்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள்.

மிடில் ஓவர்களில் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அந்த ஜோடியில் இருவருமே அரை சதம் அடித்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதில் கேப்டன் ஹோப் 86 (88) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரூத்தர்போர்ட் சதத்தை பதிவு செய்து 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 113 (80) ரன்களை விளாசி அவுட்டானார்.

- Advertisement -

5 வருடம் 11 போட்டிகள்:

இறுதியில் அவருடன் சேர்ந்து விளையாடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் தம்முடைய பங்கிற்கு 41* (31) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 47.4 ஓவரில் 295-5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளை வெஸ்ட் இண்டீஸ் உடைத்துள்ளது.

இதையும் படிங்க: டிராவிஸ் ஹெட்டை அடக்க இதான் வழி.. இந்தியாவின் காயத்தில் உப்பை தடவிய மைக்கேல் வாகன் கிண்டல்

ஆம் கடைசியாக 2018ஆம் ஆண்டு மிர்ப்பூரில் வங்கதேசத்தை தோற்கடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் பின்னர் விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. தற்போது அதை இப்போட்டியில் உடைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் நிம்மதி அடைந்துள்ளது. மறுபுறம் பேட்டிங் போல பந்து வீச்சில் அசத்தத் தவறிய வங்கதேசம் தோல்வியை சந்தித்து இத்தொடரில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

Advertisement