இதனால தான் நாங்க அஷ்வினை சேக்கல. டாசுக்கு பின்னர் ரோஹித் சர்மா – அளித்த சாக்கு போக்கு என்ன தெரியுமா

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

Rohit

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இதுவரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் கடந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். அப்படி அவர் அறிவித்த பின்னர் இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய போது இந்திய அணி 4 வேகப்பந்து பேச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் உடனே விளையாடும் என்றும் அந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா தான் என்றும் அவர் அறிவித்தார்.

Ashwin

அவர் அப்படி கூறியதால் இந்த போட்டியில் அஸ்வின் விளையாடாதது உறுதியாகியது. இந்நிலையில் இப்படி ரோஹித் சர்மா அறிவித்ததற்கு பின்னர் அஸ்வின் ஏன் இந்த போட்டியில் விளையாடவில்லை என்று குறித்து பலரும் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி அஸ்வினுக்கு இடம் கொடுக்காதது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறிவரும் வேளையில் இந்த போட்டியில் அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை? என்பது குறித்து டாசுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கம் ஒன்றினையும் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்புகிறோம்.

இதையும் படிங்க : WTC Final : பாதி மேட்ச் ஜெயிச்சா போதுமா? வலையில் விழுந்து தப்பு பண்ணிட்டீங்க, ரோஹித்தை விளாசிய பாண்டிங் – காரணம் என்ன

ஏனெனில் மைதானத்தின் தன்மை, தட்பவெப்பம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் அஸ்வினை வெளியேற்றுவது கடினமான ஒரு முடிவு என்றாலும் இந்தப் போட்டிக்கு என்ன தேவையோ அதனை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement