WTC Final : பாதி மேட்ச் ஜெயிச்சா போதுமா? வலையில் விழுந்து தப்பு பண்ணிட்டீங்க, ரோஹித்தை விளாசிய பாண்டிங் – காரணம் என்ன

Ricky Ponting
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதியன்று துவங்கியது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் அந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

IND vs AUS

- Advertisement -

அதை விட போட்டி துவங்கும் போது மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருடன் 4வது பவுலராக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்த அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக சாதனை படைத்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டு ஜடேஜாவை மட்டும் ஒரே ஒரு ஸ்பின்னராக தேர்வு செய்தார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி தலைமையில் இதே இங்கிலாந்து மண்ணில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் ஒன்றாக தேர்வு செய்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பாண்டிங் விமர்சனம்:
அந்த நிலையில் இப்போட்டியின் கடைசி 2 நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுவதால் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர். இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் மட்டுமே நூற்றாண்டுக்கும் மேலாக போதிய அளவு சுழலுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக இப்போட்டியில் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவருமே விளையாட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Ashwin

இந்நிலையில் வேகத்துக்கு சாதகமாக இருக்கக்கூடிய முதல் இன்னிங்ஸ்க்கு தகுந்தார் போல் மட்டுமே இந்தியா தங்களுடைய 11 பேர் அணியை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கும் ரிக்கி பாண்டிங் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை வலையில் ரோஹித் சர்மா சிக்கி விட்டதாக விமர்சித்துள்ளார். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் ஜடேஜாவை விட அஸ்வின் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இந்த தேர்வில் இந்தியா தவறு செய்துள்ளதாக நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ்க்கு தகுந்தார் போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வு செய்து இந்தியா வலையில் விழுந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்தியா அஸ்வினை கழற்றி விட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இந்த போட்டியில் 2வது பகுதியில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்னைக் கேட்டால் அவர்கள் உமேஷ் – ஷார்துல் ஆகியோருக்கிடையே அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்”

Ponting

“நானாக இருந்தால் தாக்கூரை தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் அவர் சிராஜ் மற்றும் ஷமி போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறும் போது பந்து வீசுவார். அதே சமயம் நீங்கள் ஜடேஜாவையும் அந்த சமயத்தில் சில ஓவர்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் ஜடேஜாவை விட ஆஸ்திரேலியாவின் இடது கை பேட்ஸ்மேன்களை அஸ்வின் தான் அதிகமாக தடுமாற்றமடைய வைப்பார்” என்று கூறினார். இது மட்டுமல்லாமல் அஸ்வினை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: WTC Final : நான் கேப்டனா இருந்தா இப்டி பண்ணிருக்க மாட்டேன் – ஃபைனலில் ரோஹித்தின் 2 கேப்டன்ஷிப் முடிவுகளை விமர்சித்த கங்குலி

அவர் அப்படி சொன்னதற்கேற்றார் போல் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் 43, மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களுக்கு அவுட்டாக்கிய இந்தியாவை அடுத்ததாக டிராவிஸ் ஹெட் ஒருபுறம் அதிரடியாக 93* ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் மறுபுறம் நங்கூரமாக 45* ரன்கள் எடுத்து சவாலை கொடுத்து வருகிறார்கள். இதனால் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே இந்தியா பின்தங்கியுள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Advertisement