WTC Final : நான் கேப்டனா இருந்தா இப்டி பண்ணிருக்க மாட்டேன் – ஃபைனலில் ரோஹித்தின் 2 கேப்டன்ஷிப் முடிவுகளை விமர்சித்த கங்குலி

Sourav Ganguly
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதியன்று இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. அதில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் களமிறங்கியது.

Rohit-Toss

- Advertisement -

அந்த நிலையில் முக்கியமான டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அத்துடன் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருடன் 4வது பவுலராக ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூரை தேர்ந்தெடுத்த அவர் பேட்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜடேஜாவை ஒரே ஒரு ஸ்பின்னராகவும் விக்கெட் கீப்பராக பரத்தையும் தேர்வு செய்தார். ஆனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் கழற்றி விட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

கங்குலி விமர்சனம்:
ஏனெனில் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்கள் ஸ்விங் வேகத்துக்கு சாதகமாக இருந்தாலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் மட்டும் காலம் காலமாக சற்று சுழலுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அதனால் அஸ்வின் – ஜடேஜா ஆகிய இருவரும் விளையாட வேண்டுமென சச்சின், பாண்டியன் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டும் கடந்த ஃபைனலில் அந்த இருவரையும் சேர்ந்தார் போல் தேர்ந்தெடுத்தது தோல்வியை கொடுத்ததால் இம்முறை ரோகித் சர்மா புதிய முடிவை எடுத்துள்ளார்.

Ashwin

இந்நிலையில் ஃபைனல் போன்ற மாபெரும் அழுத்தம் நிறைந்த போட்டியில் தாமாக இருந்தால் டாஸ் வென்று முதலில் பந்து வீசியிருக்க மாட்டேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் தாமாகவே அழுத்தம் எதிரணி பக்கம் திரும்பி விடும் என்று தெரிவிக்கும் அவர் இந்த ஃபைனலில் அஸ்வினை தேர்வு செய்யாததற்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் நேரலை வர்ணனையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்யும் முடிவின் ரசிகன் அல்ல. இருப்பினும் இது ஒரே ஒரு போட்டி என்பதால் ரோகித் அந்த முடிவை எடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். ஆனால் கடைசியாக நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து போட்டியை வென்றதை மறக்காதீர்கள். அவர்கள் 190 ரன்களுக்கு அவுட்டானாலும் 5வது நாளில் போட்டியை வென்றனர். ஒருவேளை இது தொடராக இருந்தால் இப்போட்டியில் ரோகித் பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருப்பார்”

gangully

“மேலும் முதலில் பந்து வீசுவதால் இந்தியாவுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் முதல் இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க வேண்டும். மேலும் அஸ்வின் பற்றிய விவாதம் முடிவெடுத்த பின் பேசப்படுகிறது. அது போன்றவற்றை நான் நம்புவதில்லை. பொதுவாக கேப்டனாக நீங்கள் டாஸ் வெல்வதற்கு முன்பாக அணியை பற்றிய முடிவெடுப்பீர்கள். அந்த வகையில் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர்கள் இங்கிலாந்தில் வெற்றிகளை பெற்றுள்ளனர்”

இதையும் படிங்க:வீடியோ : கவாஜாவை டக் அவுட்டாக்கிய சிராஜ், பார்ட்னர்ஷிப்பை உடைத்த தாக்கூர் – உணவு இடைவெளி ஸ்கோர் இதோ

“ஆனால் நீங்கள் என்னை கேட்டால் கேப்டனாக நான் வேறு மாதிரி நினைப்பேன். ரோகித் சர்மாவும் நானும் வித்தியாசமாக யோசிப்போம். நானாக இருந்தால் அஸ்வின் போன்ற தரமான ஒருவரை 11 பேர் அணியிலிருந்து வெளியே வைப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement