கவாஜாவை டக் அவுட்டாக்கிய சிராஜ், பார்ட்னர்ஷிப்பை உடைத்த தாக்கூர் – உணவு இடைவெளி ஸ்கோர் இதோ

Siraj Thakur
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதியன்று இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை எதிர்கொண்டது. கடந்த ஃபைனலில் இதே இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் வென்று 2013க்குப்பின் 9 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்கியது.

குறிப்பாக சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்த இந்தியா சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வென்ற தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்கியது. மறுபுறம் அதிக உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இந்த ஃபைனலில் வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவியதால் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்த அவர் அஸ்வினுக்கு பதிலாக ஷார்துல் தாக்கூரையும் விக்கெட் கீப்பராக பரத்தையும் தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னருடன் களமிறங்கிய உஸ்மான் கவஜா ஸ்விங் செய்து மிரட்டலாக பந்து வீசிய இந்திய பவுலர்களிடம் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக 9 பந்துகளை எதிர்கொண்டும் சிங்கிள் எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரின் 4வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார்.

அதனால் 2/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டேவிட் வார்னருடன் இணைந்து நங்கூரமாக விளையாட முயற்சித்தார். அந்த நிலையில் சிராஜ் 6வது ஓவரை வீசிய சிராஜ் முதல் பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வேகத்தில் வந்ததை சரியாக கணிக்க தவறிய அவர் கையில் அடி வாங்கினார். அதனால் அந்த இருவருக்கும் அனல் பறக்கும் போட்டி துவங்கிய நிலையில் மறுபுறம் சுமாரான ஃபார்மில் தவிக்கும் டேவிட் வார்னர் சற்று அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலாக நின்றார். இருப்பினும் 22வது ஓவரில் ஷார்துல் தாக்கூர் 4வது பந்து நன்றாக ஸ்விங் ஆகி வந்ததை கணிக்க தவறிய அவர் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமான டைவ் அடித்து கேட்ச் பிடித்ததால் 8 பவுண்டரியுடன் 43 (6 ரன்களில் அவுட்டானார். அந்த வகையில் எதிரணி பார்ட்னர்சிப் அமைத்த போது மீண்டும் ஒருமுறை உடைத்த அவர் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

அதைத் தொடர்ந்து முதல் நாள் உணவு இடைவெளியில் ஆஸ்திரேலியா 73/2 ரன்கள் எடுத்துள்ள நிலையில் களத்தில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்கள் லபுஸ்ஷேன் 26* ஸ்டீவ் ஸ்மித் 2* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement