ஆசிய கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா – கோலியையும் மிஞ்சி அசத்தல்

Sachin Tendulkar
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக விளங்கும் இந்தியா 8வது முறையாக கோப்பையை வெல்லும் பயணத்தில் லீக் சுற்றின் முடிவில் 3 புள்ளிகளை பற்றி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசாத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை பெற்ற இந்தியா நேற்று நேபாளுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபால் 48.3 ஓவரில் 230 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்ய துவங்கிய போது மழை வந்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

சச்சினை முந்திய ரோஹித்:
அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 74* (59) ரன்களும் சுப்மன் கில் 67* (62) ரன்களும் எடுத்து 20.1 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றியை 74* ரன்கள் அடித்து மிகவும் சுலபமாக மாற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் 6 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடியாக விளையாடிய அவர் சூப்பர் 4 சுற்றுக்கு முன்பாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அத்துடன் இப்போட்டியில் அடித்த 74 ரன்களையும் சேர்த்து ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா 10 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக 20 ஓவர், 50 ஓவர் என அனைத்து வகையான ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 1990 – 2012 வரையிலான காலகட்டங்களில் சச்சின் 9 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அவரை முந்தியுள்ள ரோகித் சர்மா 3வது இடத்தில் இருக்கும் மற்றொரு நட்சத்திரம் விராட் கோலியையும் (8 முறை) மிஞ்சி முதலிடத்தில் இருக்கிறார். அதே போல 50 ஓவர் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 971 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 49 வருட இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் கங்குலி, தோனி, கோலி போன்ற எந்த கேப்டனும் செய்யாத – தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

அந்த பட்டியலில் தற்போது வரை 830 ரன்கள் அடித்துள்ள ரோகித் சர்மா இந்த தொடரில் இன்னும் 62 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சரித்திரம் படைப்பார். எனவே இந்த தொடரில் இன்னும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடும் என்பதால் சச்சினின் அந்த சாதனையையும் ரோகித் சர்மா உடைக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement