- Advertisement -
உலக கிரிக்கெட்

சவுரவ் கங்குலி மற்றும் ஆடம் கில்க்ரிஸ்ட் ஆகியோரது சாதனையை துவக்க வீரராக முறியடித்த – ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 97 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து முன்னாள் ஜாம்பவான் வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ஆடம் கில்க்ரிஸ்ட் ஆகியோரது முக்கியமான சாதனை ஒன்றினை தகர்த்துள்ளார்.

கங்குலி மற்றும் கில்க்ரிஸ்ட் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா :

அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் 73 ரன்கள் அடித்ததன் மூலம் தனது 59-ஆவது அரைசதத்தை ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்ததோடு சேர்த்து ஆஸ்திரேலியா மண்ணிலும் 1000 ரன்களை ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துவக்க வீரர்களாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலி மற்றும் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோரது சாதனையை அவர் முந்தியுள்ளார்.

இன்றைய போட்டி ஆரம்பிக்கும் போது 9146 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருந்த ரோகித் சர்மா மேலும் 73 ரன்களை குவித்து தற்போது 9219 ரன்களுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தினை பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் ஆடம் கில்க்ரிஸ்ட் 9200 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், சவுரவ் கங்குலி 9146 ரன்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று இடங்களில் சச்சின் டெண்டுல்கர் 15310 ரன்களுடனும் முதலிடத்திலும், சனத் ஜெயசூரியா 12740 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், கிரிஸ் கெயில் 10179 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : கடந்த 10 வருஷத்தில் இல்லாத அளவுக்கு ஸ்லோ 50.. ஆனாலும் பொறுப்பான ஆட்டம் – ஹிட் மேன் இஸ் பேக்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா தற்போது முழுநேர துவக்க வீரராக மட்டுமே இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவ்வேளையில் இன்றைய போட்டியில் அவர் அடித்த இந்த அரைசதம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -