இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற வேளையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியாக விளையாட இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள ரோஹித் சர்மா தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.
பொறுப்பான அரைசதம் அடித்த ரோஹித் சர்மா :
இந்த தொடரின் முதலாவது போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்திருந்த அவர் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தது கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஒரு பொறுமையான அரைசதமாக பதிவாகி இருந்தாலும் அவரது ஆட்டம் இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறலாம்.
ஏனெனில் இன்றைய போட்டியின் போது 7 ஆவது ஓவரிலேயே 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய வேளையில் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து பாட்னர்ஷிப் அமைத்த ரோகித் சர்மா மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 74 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களின் மூலம் அரைசதம் கடந்த வேளையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொறுமையான அரைசதத்தை அடித்திருந்தார். ஆனாலும் இந்திய அணி இக்கட்டான நிலைமையில் தவித்த வேளையில் களத்தின் தன்மையை கணித்தும், போட்டியின் சூழலை கருத்தில் கொண்டும் அவர் விளையாடிய பொறுப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க : முதல் இந்திய வீரராகவும், 5 ஆவது சர்வதேச வீரராகவும் ஆஸி மண்ணில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ஹிட் மேன்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்த ரோஹித் சர்மா இன்றைய இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



