பேட்டிங்கில் தடுமாறினாலும் கேப்டனாக ஜொலிக்கும் ரோகித் சர்மா – டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனை

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா குரூப் 2 பிரிவில் களமிறங்கிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்து 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான தன்னுடைய கடைசி சம்பிரதாய போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து எதிர்கொள்ள தகுதி பெற்றது.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் அடுத்ததாக நாக் அவுட் சுற்று துவங்க உள்ளதால் இதுவரை செய்த சிறு சிறு தவறுகளையும் திருத்திக் கொண்டு 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பைனலுக்கு சென்று கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா காலடி எடுத்து வைக்கிறது. அப்படி பார்க்கும் போது பேட்டிங் துறையில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பெற்றுக் கொடுத்த அசாத்தியமான வெற்றி உட்பட 246* ரன்களை குவித்து வரும் விராட் கோலி அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார்.

தடுமாறும் ரோஹித் உலகசாதனை:
அதிலும் குறிப்பாக இந்த உலகக்கோப்பையிலும் ஒட்டுமொத்த டி20 உலக கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மனாக சாதனை படைத்து வரும் அவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவ் 225* ரன்களை குவித்து அடுத்தடுத்த வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடியில் ஆரம்பத்தில் தடுமாறிய கேஎல் ராகுல் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்த அரை சதங்களை அடித்து ஃபார்முக்கு திரும்பி பலத்தை சேர்க்கும் நிலையில் அவருடன் அதிரடி காட்ட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 15, 2, 15, 53, 7 என சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Rohit Sharma IND vs NED

அதிலும் கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய அவர் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக இப்படி சுமாராக செயல்பட்டு வருவது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. இருப்பினும் அவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் அரையிறுதி, பைனல் போன்ற அழுத்தம் வாய்ந்த பெரிய போட்டிகளில் அசத்துவார்கள் என்பதால் நாக் அவுட் சுற்றில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

அதே சமயம் இந்த தொடரில் கேப்டனாக அவரது செயல்பாடுகள் குறை சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக இருந்து வருகிறது. அதனாலேயே உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையையில் லீக் சுற்றுடன் வெளியேறியது போல் அல்லாமல் இம்முறை சிறப்பாக செயல்பட்டு இந்த நிலைமையை எட்டியுள்ளது. அந்த வகையில் நாக் அவுட் சுற்றிலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு அவர் கோப்பையை வென்று கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Babar Azam Rohit Sharma IND vs PAK

1. அப்படி கேப்டனாக அசத்தும் அவர் ஜிம்பாப்பேவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பதிவு செய்த வெற்றியும் சேர்த்து இந்த வருடம் 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பாபர் அசாம் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 21* (2022)
2. பாபர் அசாம் : 20 (2021)
3. சர்பராஸ் அகமது : 17 (2018)

இதையும் படிங்க : IND vs ZIM : அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க?

2. மேலும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான வெற்றியும் சேர்த்து இதுவரை அவர் களமிறங்கிய 147 போட்டிகளில் இந்தியா 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் அவர் எழுதியுள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 100*
2. சோயப் மாலிக் : 87
3. விராட் கோலி : 75
4. முகமது ஹபீஸ் : 71
5. மார்ட்டின் கப்தில் : 69

Advertisement