IND vs ZIM : அம்பயரின் தவறால் அரைசதம் கடந்தாரா சூரியகுமார் யாதவ் – அடப்பாவமே இதை எப்படி மிஸ் பண்ணாங்க?

Umpire-and-SKY
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறலாம் என்கிற வேளையில் பங்கேற்ற இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று குருப் இரண்டில் முதல் அணியாக அரையறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Suryakumar Yadav

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 186 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் 25 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்தார்.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் அடித்த சூரியகுமார் இந்த 61 ரன்களுடன் சேர்த்து இந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Suryakumar Yadav 1

மேலும் இந்த போட்டியின் போது 15 ஓவர்களில் இந்திய அணி சுமாரான அளவிலேயே ரன்களை குவித்திருந்த வேளையில் இறுதி 5 ஓவர்களில் இவர் ஆடிய அதிரடிக்கு தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது சூரியகுமார் யாதவ் விக்கெட்டை அம்பயர் கவனிக்காத ஒரு விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் 19-வது ஓவரின் போது ஜிம்பாப்வே வீரர் முசர்பானி வீசிய கடைசி பந்தில் சூரியகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று பந்தை தவறவிட்டார். அப்போது பவுலர் சூரியகுமாரின் கிளவுசில் பந்து பட்டது என்று நினைத்து அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. அதேபோன்று ஜிம்பாப்வே அணி கேப்டனும் அதற்கு ரிவ்யூ கேட்கவில்லை.

இதையும் படிங்க : 1080 டிகிரியில் சூறாவளியாக சுழன்றடித்த சூரியகுமார் புதிய வரலாற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

ஆனால் அடுத்த ஓவரின் போது வெளியான ரீப்ளேவில் சூரியகுமார் யாதவ் கிளவுஸில் பந்து பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. ஒருவேளை அந்த பந்தில் அவர் அவுட் ஆகி இருந்தால் அவரால் அரை சதமும் அடித்து இருக்க முடியாது. இந்திய அணி 186 ரன்களும் குவித்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement