ஆஸிக்கு எதிரா அதை நிரூப்பிச்சு காட்டுங்க.. 2023 உ.கோ டீம்’லயும் இடம் தரோம்.. அஷ்வினுக்கு கேப்டன் ரோஹித் மறைமுக ஆதரவு

Ravichandran Ashwin Rohit Sharma 2
Advertisement

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 8வது முறையாக கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் 2023 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்கள் கூட இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த நிலையில் ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறிய அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

ரோஹித் ஆதரவு:
குறிப்பாக ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார் என்று சொல்லலாம். அந்த சூழ்நிலையில் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அஸ்வின் அதிகப்படியான அனுபவத்தை கொண்டிருக்கிறார்.

மேலும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் ஏற்கனவே அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனையும் படைத்திருக்கிறார். அதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆஸ்திரேலிய தொடர் மட்டுமல்லாமல் 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2021 ஜனவரிக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும் அதிகப்படியான வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடி அனுபவத்தை கொண்டிருப்பதால் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்தும் பட்சத்தில் உலக கோப்பையிலும் கொடுப்போம் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிட்டத்தட்ட 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வினிடம் ஏகப்பட்ட அனுபவம் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் அஸ்வின் போன்றவருக்கு எவ்விதமான களத்திலும் விளையாடுவது பிரச்சினையாக இருக்காது”

இதையும் படிங்க: IND vs AUS : முதல் 2 போட்டிக்கு தனி அணி. கடைசி போட்டிக்கு தனி அணி – வெளியான இந்திய வீரர்களின் பட்டியல்

“மேலும் அவரைப் போன்ற அனுபவம் மிகுந்தவருக்கு உடலை விட தலையில் அதிக திறமை இருக்கும். மேலும் சமீபத்தில் பேசும் போது தற்போது எந்த நிலையில் அவரும் அவருடைய உடலும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் டிஎன்பிஎல் தொடரில் விளையாடியவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது ஒரு குறை என்று அர்த்தமல்ல. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அவர் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை எங்களுக்கு காட்டும்” என்று கூறினார்.

Advertisement