IND vs AUS : முதல் 2 போட்டிக்கு தனி அணி. கடைசி போட்டிக்கு தனி அணி – வெளியான இந்திய வீரர்களின் பட்டியல்

IND-vs-AUS
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரினை கைப்பற்றி தற்போது சாம்பியன் அணியாக நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்க்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த ஆஸ்திரேலியா தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கான இந்திய அணி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த அணியில் முதல் இரண்டு ஆட்டங்களில் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியை கே.எல் ராகுல் வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா அணிக்கு திரும்புவதோடு சமீபத்தில் காயம் அடைந்த அக்சர் பட்டேலும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்தியில் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று அக்சர் பட்டேல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழக வீரர் அஸ்வினுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு முதல் இரண்டு போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிப்பார் என்றும் மூன்றாவது போட்டியிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இதோ :

1) கே.எல் ராகுல், 2) ரவீந்திர ஜடேஜா, 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) திலக் வர்மா, 8) இஷான் கிஷன், 9) ஷர்துல் தாகூர், 10) வாஷிங்டன் சுந்தர், 11) அஷ்வின், 12) பும்ரா, 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) பிரசித் கிருஷ்ணா

இதையும் படிங்க : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் 2023 உ.கோ அணி அறிவிப்பு.. ஜேசன் ராய் அதிரடி நீக்கம்.. இளம் வீரருக்கு வாய்ப்பு.. ரசிகர்கள் வரவேற்பு

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஹார்டிக் பாண்டியா, 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) கே.எல் ராகுல், 8) இஷான் கிஷன், 9) ரவீந்திர ஜடேஜா, 10) ஷர்துல் தாகூர், 11) அக்சர் பட்டேல், 12) வாஷிங்டன் சுந்தர், 13) குல்தீப் யாதவ், 14) அஷ்வின், 15) பும்ரா, 16) முகமது ஷமி, 17) முகமது சிராஜ்.

Advertisement