நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் 2023 உ.கோ அணி அறிவிப்பு.. ஜேசன் ராய் அதிரடி நீக்கம்.. இளம் வீரருக்கு வாய்ப்பு.. ரசிகர்கள் வரவேற்பு

Jason Roy
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 கோப்பையை போல வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகள் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதால் இந்தியா போன்ற எதிரணிகளுக்கு பெரிய சவாலை கொடுத்து இத்தொடரில் கோப்யையை தக்கவைக்கும் அணியாக இருக்கும் என்று நிறைய முன்னால் வீரர்கள் கணித்து வருகின்றனர்.

- Advertisement -

இங்கிலாந்து அணி:
இந்நிலையில் இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பையை தக்க வைப்பதற்காக தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து வாரியம் நேற்று வெளியிட்டது. 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் தலைமை தாங்கும் அந்த அணியில் நட்சத்திர தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இங்கிலாந்தின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்திருந்த அவர் முதுகு வலியால் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அதன் காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டுள்ள இங்கிலாந்து 24 இளம் ஹரி ப்ரூக்கை தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

சமீப காலங்களாகவே சிறப்பாக செயல்பட்டதால் இங்கிலாந்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட அவரை பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து திரும்பி வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக இங்கிலாந்து வாரியம் உலகக்கோப்பை உத்தேச அணியில் கழற்றி விட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதனால் கடைசி நேரத்தில் அவர்களை நேரடியாக இங்கிலாந்து தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் தோற்றும் பாகிஸ்தான் தரவரிசையில் நம்பர் ஒன் அணியானது எப்படி? முதலிடத்திற்கு இந்தியா என்ன செய்யணும்

மேலும் அடில் ரசித், மார்க் வுட் ஆகியோர் லேசான காயத்தை சந்தித்திருந்தாலும் உலகக் கோப்பைக்குகள் தயாராகி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் குணமடையாததால் ரிசர்வ் வீரராக மட்டுமே இந்தியாவுக்கு பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொய்ன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹரி ப்ரூக், சாம் கரன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் ஓக்ஸ்

Advertisement