நியூஸிலாந்து அதை செய்ய வருவாங்கன்னு தெரியும்.. ஆனா அதெல்லாம் வேலையாகாது.. ரோஹித் பேட்டி

Rohit Sharma Press
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போகும் முதல் அணியை தீர்மானிக்கும் முதல் செமி ஃபைனல் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 4வது இடத்தை பிடித்த நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளில் இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து சொந்த மண்ணில் அசத்தி வருவதால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இருப்பினும் ஐசிசி தொடர்களில் எப்போதுமே நியூசிலாந்துக்கு எதிராக தோல்விகளையே அதிகமாக சந்தித்துள்ள இந்தியா இதற்கு முன் நாக் அவுட் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

- Advertisement -

ரோஹித் நம்பிக்கை:
குறிப்பாக 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களது விக்கெட்டை பரிசளித்ததால் கடைசியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் போராடியும் இந்தியா நெஞ்சை உடைக்கும் தோல்வியை பெற்றதை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் 2019 உலகக்கோப்பையில் தோற்கடித்த உத்வேகத்துடன் இப்போட்டியில் நியூசிலாந்து வருவார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2019 செமி ஃபைனல் முடிந்தது முடிந்து போனது என்று ரஜினி ஸ்டைலில் தெரிவிக்கும் அவர் இம்முறை போட்டி நாளன்று சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெல்லும் என்று கூறியுள்ளார். இது பற்றி போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது எங்களுடைய மனதில் இருக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை”

- Advertisement -

“ஏனெனில் முடிந்தது முடிந்து போனது. இன்று நீங்கள் என்ன செய்ய முடியும் நாளை என்ன செய்யலாம் என்பதே முக்கியமாகும். நாங்களும் பழையவற்றை பேசுவோம். ஆனால் கடந்த 10 வருடங்களில் அல்லது 5 வருடங்களுக்கு முன்பாக அல்லது கடைசி உலக கோப்பையில் என்ன நடந்தது என்பதை பற்றி நாங்கள் அதிகம் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை”

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில் தமிழக வீரரை களமிறக்க திட்டம் – எதற்கு தெரியுமா?

“இருப்பினும் கடந்த தோல்வியில் என்ன தவறு செய்தோம் எது தவறாக சென்றது என்பது போன்ற பாடங்களை கற்று இப்போட்டிக்கு நாங்கள் வந்துள்ளோம். மேலும் 2019இல் இருந்த அணியை விட தற்போது முற்றிலும் வித்தியாசமான அணி இருக்கிறது. இம்முறை நாங்கள் வெற்றியை நோக்கி சிறப்பாக நகர்ந்து வருவதால் அதையே தொடர விரும்புகிறோம். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது நாளை என்ன நடைபெறும் என்பதை தீர்மானிக்காது” என்று கூறினார்.

Advertisement