நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில் தமிழக வீரரை களமிறக்க திட்டம் – எதற்கு தெரியுமா?

Ashwin
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் 50 ஓவர் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற இந்த தொடரின் லீக் சுற்றுப்போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடத்தை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியானது நவம்பர் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

அதனை தொடர்ந்து நவம்பர் 16-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறும். இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்பதனால் இந்த நாக்கவுட் போட்டிகளில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இம்முறை அவர்களை பழித்திருக்கும் விதமாக இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய முனைப்புடன் களமிறங்க இருக்கிறது.

இந்நிலையில் நாளைய இந்த அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கூடுதலாக ஆறாவது பந்துவீச்சாளராக தமிழக வீரர் அஸ்வினை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

- Advertisement -

இருப்பினும் இதுபோன்ற ஒரு திட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. ஏனெனில் நியூசிலாந்து அணியில் அதிக இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பதாலும், வான்கடே மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்து சில போட்டிகளாகவே பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விளையாடி வரும் இந்திய அணி இந்த போட்டியில் அஸ்வினை சேர்த்தாலும் சேர்க்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இதை எங்க அடிச்சிங்கன்னு கேட்கலாம்ன்னு நெனச்சேன்.. சச்சின் சிலை பற்றி சாஸ்திரி வேடிக்கையான கருத்து

அப்படி அஸ்வின் இடம்பெறும் பட்சத்தில் சூரியகுமார் யாதவ் அணியிலிருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது. கடந்த நவம்பர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய அஸ்வின் அதன்பிறகு எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருந்து வந்த வேளையில் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement