இதை எங்க அடிச்சிங்கன்னு கேட்கலாம்ன்னு நெனச்சேன்.. சச்சின் சிலை பற்றி சாஸ்திரி வேடிக்கையான கருத்து

ravi Shastri 2
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகத்தான வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வாசிம் அக்ரம், மெக்ராத், ஷேன் வார்னே, முரளிதரன் போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்ட அவர் அதிக ரன்கள் அடித்து 100 சதங்களை பதிவு செய்து யாராலும் எளிதில் தொட முடியாத உலக சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதத்தை முதலாவதாக அடித்த அவர் 2011 உலகக் கோப்பை உட்பட இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன் இந்திய பேட்டிங்கை 24 வருடங்கள் தன்னுடைய தோள் மீது சுமந்த அவர் தற்போதுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

- Advertisement -

சாஸ்திரி அதிருப்தி:
அப்படிப்பட்ட அவருக்கு சொந்த ஊரான மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் சமீபத்தில் முழு உருவத்தில் திறக்கப்பட்டது. குறிப்பாக டிரேட் மார்க் ஷாட்டான ஸ்ட்ரைட் டிரைவை அடிப்பது போல் வடிவமைக்கப்பட்ட அந்த சிலையை மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக சச்சின் தம்முடைய கையாலே திறந்து வைத்தது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்தது.

ஆனாலும் அந்த சிலையை பார்ப்பதற்கு சச்சின் போல் அல்லாமல் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் போல இருப்பதாக நிறைய ரசிகர்கள் தெரிவித்தனர். ஏனெனில் பொதுவாகவே சச்சின் தம்முடைய கால்களுக்கு நேராக பேட் இருப்பது போல ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பார். ஆனால் அந்த சிலையை பார்க்கும் போது ஸ்டீவ் ஸ்மித் பேட்டை இடுப்புக்கு மேலே உயர்த்தி அடிப்பது போல ரசிகர்களுக்கு தெரிகிறது.

- Advertisement -

அதை விட அந்த சிலையின் முகத்தை உற்று நோக்கும் போது சச்சினுக்கு பதிலாக ஸ்மித் முகம் தான் தெரிவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிலையை பார்த்த பின் அந்த ஷாட்டை இந்த போட்டியில் எப்போது அடித்தீர்கள்? என்று சச்சினிடம் கேட்கலாம் என நினைத்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதாவது ரசிகர்கள் கூறுவது போல அந்த சிலை சச்சினுக்கு பதிலாக ஸ்மித் போன்ற தோற்றத்தை காட்டுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவங்களுக்கு நாங்க வேண்டாதவங்களா ஆகிட்டோம்.. இந்திய அணி அசத்துறாங்க.. கபில் தேவ் ஆதங்கம்

“அங்கே நேராக சென்று இன்னும் அதை நான் பார்க்கவில்லை. அதனால் சச்சினிடம் இதைப் பற்றி கேட்கவில்லை. இருப்பினும் இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சச்சினிடம் கேட்க விரும்புகிறேன். குறிப்பாக இந்த ஷாட்டை எங்கே விளையாடுகிறீர்கள்? ஏனெனில் அந்த சிலையால் சச்சின் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது மகிழ்ச்சியாக உள்ளாரா என்பதை அவருடைய முகத்தை பார்த்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement