அவங்களுக்கு நாங்க வேண்டாதவங்களா ஆகிட்டோம்.. இந்திய அணி அசத்துறாங்க.. கபில் தேவ் ஆதங்கம்

Kapil Dev 2
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 9 லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டியிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் எதிரணிகளை மிரட்டி வரும் இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஷமி, பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த உலகக் கோப்பையில் அபாரமாக செயல்படுவதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஆதங்கமும் பாராட்டும்:
இருப்பினும் தற்போதுள்ள வீரர்கள் யாருமே தம்மிடம் எவ்விதமான ஆலோசனைகளை கேட்பதில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தற்போதைய அணியினருக்கு தங்களைப் போன்ற முன்னாள் வீரர்களிடம் ஆலோசனைகள் வேண்டாத அளவுக்கு அசத்துக்காக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நான் நமது வீரர்களிடம் இப்படி விளையாடுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்ல விரும்பவில்லை. மாறாக பிரிந்து இங்கேயே இருந்து அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க மட்டும் விரும்புகிறேன். தற்போதைய வீரர்கள் யாரும் உதவிக்காக என்னிடம் வருவதில்லை. பொதுவாக சிலர் ஆலோசனைகளை விரும்புவார்கள் சிலர் விரும்ப மாட்டார்கள். எனவே நான் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கடமையும் இல்லை”

- Advertisement -

“தற்போதுள்ள வீரர்கள் புத்திசாலிகள் என்பதால் எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு தேவையில்லை. நாங்கள் அவர்களை விட சிறந்தவர்கள் அல்ல. அவர்கள் சிறந்து விளங்குவதற்கு மட்டுமே நாம் வழி காட்ட முடியும். இந்த உலகக் கோப்பையில் ஷமி அபாரமாக செயல்படும் நிலையில் தம்முடைய வித்தியாசமான ஆக்சனால் அசத்தும் பும்ராவுக்கு தலை வணங்குகிறேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு முன்பே நட்சத்திர வீரரை கழற்றி விட்ட சிஎஸ்கே.. வெளியான காரணம்

“சொல்லப்போனால் அவரை போல மிகவும் குறைவான தூரத்தில் ஓடி வித்தியாசமான ஆக்‌ஷனை பயன்படுத்தி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் கற்பனையிலும் நினைப்பதில்லை. இந்த வீரர்களிடம் நல்ல அனுபவம் இருக்கிறது. அவர்கள் நல்ல ஃபிட்டாக இருக்கின்றனர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2019 செமி ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது. குறிப்பாக இதே தொடரில் லீக் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்த நம்பிக்கையுடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement