ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு முன்பே நட்சத்திர வீரரை கழற்றி விட்ட சிஎஸ்கே.. வெளியான காரணம்

Ben Stokes
Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை 2024 கோடைகாலத்தில் மகிழ்விப்பதற்காக நடைபெற உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வருடம் ரசிகர்களை மகிழ்வித்த 2023 சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது.

இதைத் தொடர்ந்து 2024 சீசனில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கும் சென்னை தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை கழற்றி விடும் வேலைகளை செய்ய வாங்கியுள்ளது. சொல்லப்போனால் அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களை விடுவித்து இறுதிக்கட்ட வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 26க்குள் சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கழற்றிவிட்ட சிஎஸ்கே:
இந்நிலையில் 2024 சீசன் ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க சென்னை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 2019 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை போன்ற இங்கிலாந்தின் மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவரை கடந்த வருட ஏலத்தில் சென்னை நிர்வாகம் 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் போட்டி போட்டு சென்னை வாங்கியது.

இருப்பினும் ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்று அறிவித்த அவர் முழங்கால் காயத்தால் ஓரிரு போட்டிகளில் மட்டுமே சென்னைக்காக விளையாடி ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் ஏமாற்றமடைந்த சென்னை ரசிகர்கள் அவரை கழற்றி விடலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையிலும் காயத்தால் சுமாராகவே விளையாடிய அவர் ஓய்விலிருந்து கம்பேக் கொடுத்ததும் இங்கிலாந்தை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

- Advertisement -

மேலும் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ள அவர் அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்பதால் 2024 சீசனிலும் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் அவரை விடுவிக்க சென்னை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கும் அந்த அணியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி பேசியது பின்வருமாறு. “ஸ்டோக்ஸ் பெரிய போட்டிகளில் அசத்தக்கூடிய பிளேயர் என்பதால் நாங்கள் விடுவிக்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: செமி பைனலில் இந்திய அணி வீரர்களுக்கு காத்திருக்கும் சவால். இதை சமாளிச்சிட்டா – நாம ஜெயிச்சிடலாம்

“ஆனால் அவர் காயத்தால் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவர் விளையாடாவிட்டால் எங்களுக்கு தேக்கமடையும் 16 கோடியை வைத்து வேறு சில நல்ல வீரர்களை வாங்க முடியும்” என்று கூறினார். இதே போலவே குஜராத் அணிக்காக 10 கோடிக்கு விளையாடும் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement