செமி பைனலில் இந்திய அணி வீரர்களுக்கு காத்திருக்கும் சவால். இதை சமாளிச்சிட்டா – நாம ஜெயிச்சிடலாம்

NZ
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணியானது இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து தற்போது 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை சொந்த மண்ணில் கைப்பற்றும் வாய்ப்பு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இன்னும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

- Advertisement -

எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அந்த முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் நாளை நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற என்னென்ன சவால்கள் காத்திருக்கிறது என்பது குறித்த அலசல்களை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் வான்கடே மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த மைதானத்தின் அளவுகள் சிறியது என்பதினால் வேகப்பந்து வீச்சில் எளிதாக பேட்டிங் செய்துவிடலாம் என்றும் ஆனால் ஆடுகளம் சற்று சுழலுக்கு சாதகமாக இருக்கும் வேளையில் சுழற்பந்து வீச்சாளர்களை கணவத்துடன் விளையாட வேண்டிய சவால் இந்திய அணிக்கு காத்திருக்கிறது. நியூசிலாந்து அணியில் தற்போது மிட்சல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்பட்டு வரும் வேளையில் அவர்களை இந்திய அணி சமாளித்து விட்டால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணா மாறுமா? அப்துல் ரசாக் கருத்தை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

அதேபோன்று வான்கடே மைதானத்தை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்தால் 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்ற ஒரு நிர்பந்தமும் இருக்கிறது. இது எப்படி இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement