ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணா மாறுமா? அப்துல் ரசாக் கருத்தை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

Abdul Razzaq
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாடிய அந்த அணி 1992 போல கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

அதிலும் குறிப்பாக தங்களை எப்போதும் புறக்கணிக்க நினைக்கும் இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விரும்பினார்கள். இருப்பினும் வரலாற்றை மாற்றுவோம் என்று தெரிவித்த பாபர் அசாம் தலைமையிலான அணியினர் 191 ரன்களுக்கு சுருண்டு இந்தியாவிடம் வரலாற்றில் 8வது முறையாக தொடர்ந்து படுதோல்வியை சந்தித்தனர்.

- Advertisement -

விளாசும் ரசிகர்கள்:
அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையில் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியினர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பலாக செயல்பட்டனர். அதனால் தற்போது பாகிஸ்தான் அணியினர் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் பாபர் அசாம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே அதில் முன்னேறுவதற்கு என்ன செய்யலாம் என்று முன்னாள் வீரர் அப்துல் ரசாக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராயை முன்னுதாரணமாக வைத்து அவர் கொடுத்த சம்பந்தமற்ற பதில் பின்வருமாறு.

- Advertisement -

“இங்கே இருக்கும் அனைவரும் அதிரடியான எண்ணம் மற்றும் பாகிஸ்தான் அணியை பற்றி பேசுகிறார்கள். உண்மையில் பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்கள் வாரியத்திடம் இல்லை. குறிப்பாக ஐஸ்வர்யா ராயை நான் திருமணம் செய்து கொண்டால் நல்ல பக்தியுள்ள குழந்தை தவறாகி விடும் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க: தோனிக்காக இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி சொல்வதற்கு ஐஸ்வர்யா ராய் பெயரை பயன்படுத்தி இப்படி மட்டமாக பேசிய அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். முன்னதாக பும்ரா தமக்கு குழந்தை போன்ற பவுலர் என்றும் அவரை எளிதாக தம்மால் அட்டாக் செய்து அதிரடியாக விளையாட முடியும் என்றும் கடந்த வருடம் தெரிவித்திருந்த அப்துல் ரசாக் சமீபத்தில் தாம் அப்படி கூறிய கருத்தை ஊடகங்கள் மாற்றி எழுதி விட்டதாக பல்டி அடித்து அதை வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement