தோனிக்காக இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

Dhoni-and-Rohit
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அப்படி நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்தது. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியானது நாளை நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இம்முறை இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் தோற்காமல் வெற்றிநடை போட்டு வரும் இந்திய அணியானது நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்து தங்களது வேண்டுகோளை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய ரசிகர்கள் பலரும் :

ரோஹித் சர்மாவிடம் தோனிக்காக நீங்கள் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியபோது அந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 221 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இறுதி நேரத்தில் வெற்றிக்கு அருகே ரன் அவுட்டாகிய தோனி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் இருந்து கண் கலங்கியபடி வெளியேறிய புகைப்படமும் அப்போது வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க : நாக் அவுட்டுக்கு முன்னாடி வீக்னெஸை சரி பண்ணிட்டாரு.. அவர நிறுத்துவது கஷ்டம்.. கைஃப் பாராட்டு

அதுவே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய கடைசி போட்டியாகவும் அமைந்தது. இந்நிலையில் தோனிக்காக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நியூசிலாந்து அணியை வீழ்த்தி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement