ரசிகர்கள் கவலைப்பட்டாலும் இதான் எங்க ஸ்டைல்.. இதுல தனி திருப்தி இருக்கு.. கேப்டன் ரோஹித் பேட்டி

Rohit Sharma 8
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றது.

குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 204 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 92 வருடங்களில் முதல் முறையாக சொந்த மண்ணில் 100 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஒரு போட்டியில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்தியாவின் ஸ்டைல்:
அதன் காரணமாக இத்தொடரை வெல்வோமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது அதற்கடுத்த 3 போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா அபார கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றுள்ளது. சொல்லப்போனால் கடைசியாக 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக இதே போல் முதல் போட்டியில் தோற்ற இந்தியா கடைசியில் 3 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வென்றது.

அதற்கு முன் 36க்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி சந்தித்தும் கடைசியில் ஆஸ்திரேலியாவை 2 – 1 (4) என்ற கணக்கில் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது. அந்த வகையில் முதல் போட்டியில் தோற்றால் பின்னர் கம்பேக் கொடுத்து தொடரை வெல்வது இந்தியாவின் ஸ்டைலாகவே இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்காக மனம் தளராமல் அழுத்தத்தை உள்வாங்கி போராடி வெற்றி காண்பத்தில் தனி திருப்தியைக் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி ஐந்தாவது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை இந்தத் தொடரை நாங்கள் வென்ற விதம் தான் அதிகமான திருப்தியை கொடுக்கிறது. இது நாங்கள் போராடி பல கம்பேக் கொடுத்த தொடராகும்”

இதையும் படிங்க: தம்பி ரிஷப் பண்ட் விளையாடி பாதத்தில்லை.. அதான் இப்படி பேசுறாரு.. இங்கிலாந்து வீரருக்கு ரோஹித் பதிலடி

“நாங்கள் அழுத்தத்தை சந்திக்கும் போதெல்லாம் அதை உள்வாங்கி வெற்றிக்காகப் போராடுகிறோம். அந்த வகையில் இந்த போட்டியின் பிட்ச் எப்படி இருந்தாலும் நாங்கள் வெற்றிக்கான எண்ணத்தைக் கொண்டுள்ளோம். பிட்ச் தாறுமாறாக சுழன்றாலும் கூட அது இரு அணிகளுக்கும் பொதுவானது. இந்த போட்டியில் நாங்கள் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை விளையாட வாய்ப்புள்ளது. இருப்பினும் அதை இன்னும் நாங்கள் உறுதி செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement