தம்பி ரிஷப் பண்ட் விளையாடி பாதத்தில்லை.. அதான் இப்படி பேசுறாரு.. இங்கிலாந்து வீரருக்கு ரோஹித் பதிலடி

Rohit Sharma 7
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்றுள்ளது. குறிப்பாக அதிரடியாக விளையாடி இந்தியாவை 12 வருடங்கள் கழித்து அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்ற எச்சரிக்கையுடன் தொடரை துவங்கிய இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்ற இந்திய அணி 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் எங்களை சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ள இந்தியா கடந்த 12 வருடங்களாக ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தையும் தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

ரோஹித் பதிலடி:
மறுபுறம் பஸ்பால் எனப்படும் டி20 போல விளையாடும் அணுகுமுறையை பின்பற்றிய இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்த தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 655* ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் 12 சிக்சருடன் 214* ரன்கள் விளாசிய அவர் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். ஆனால் அப்போது தங்களுடைய பஸ்பால் அணுகு முறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக தெரிவித்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதற்கான பாராட்டுக்கள் தங்களைச் சேரும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதற்கு ஏற்கனவே நாசர் ஹுசைன், மைக்கேல் கிளார்க், கிறிஸ் கெயில் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடிய ரிஷப் பண்ட் ஆட்டத்தை பென் டக்கெட் பார்த்திருக்க மாட்டார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலயே பென் டக்கெட் இப்படி பேசியிருக்கலாம் என்று கலாய்க்கும் வகையில் பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா இது பற்றி செய்தியார்களிடம் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: பஸ்பால் ஆடி அந்த லிஸ்ட்ல எங்க இருக்கோம்ன்னு பாத்தாவது திருந்துங்க.. இங்கிலாந்தை விமர்சித்த நாசர் ஹுசைன்

“எங்களுடைய அணியில் ரிசப் பண்ட் எனும் வீரர் இருக்கிறார். அனேகமாக பென் டக்கெட் அவர் விளையாடியதை பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். பஸ்பால் என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. இத்தொடரில் இங்கிலாந்து வீரர்கள் காட்டுத்தனமாக பேட்டை சுற்றியதையும் நான் பார்க்கவில்லை. கடந்த தொடரை விட இம்முறை அவர்கள் சிறந்த கிரிக்கெட்டையே விளையாடினார்கள். ஆனாலும் பஸ்பால் என்பதன் அர்த்தம் இன்னும் எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement