பஸ்பால் ஆடி அந்த லிஸ்ட்ல எங்க இருக்கோம்ன்னு பாத்தாவது திருந்துங்க.. இங்கிலாந்தை விமர்சித்த நாசர் ஹுசைன்

Nasser Hussain 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்தது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இந்த வெற்றிகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் பஸ்பால் அணுகுமுறையை இங்கிலாந்து பின்பற்றி வருகிறது. அதை பயன்படுத்தி நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்த இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று எச்சரித்தது.

- Advertisement -

பஸ்பால் பயன்:
ஆனால் அதற்காக சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் செயல்படாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடி இந்தியாவிடம் தோற்ற அந்த அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது. அதை விட இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ள இங்கிலாந்து 2021, 2023 ஆகிய வருடங்களைத் தொடர்ந்து 2025 ஃபைனலுக்கும் தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் பஸ்பால் ஆட்டத்தை விளையாடி ரசிகர்களை மகிழ்வித்த இங்கிலாந்து காரியத்தில் கண்ணாக இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார். இது பற்றி டெய்லி மைல் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியை அமர்ந்து பார்க்க வைக்கத் துவங்கியுள்ளது”

- Advertisement -

“ஆனால் அந்த நல்லதை தாண்டியும் அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். என்னைப் பொறுத்த வரை வெற்றி முடிவுகள் தான் முக்கியமான பணமாகும். நீங்கள் எப்படி விளையாடினாலும் கடைசியில் அனைத்து விளையாட்டு அணிகளும் ஒரு தொடரை எப்படி முடிக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் வைத்தே மதிப்பிடப்படுகின்றன. இந்த இங்கிலாந்து அணி கடந்த 2 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பார்வையை வழங்கியுள்ளது”

இதையும் படிங்க: அதுக்காக ஃபோன் பண்ணேன் எடுக்கல.. கலாச்சார இல்லாதவர்.. 100வது போட்டிக்கு அஷ்வினை விமர்சித்த சிவராமகிருஷ்ணன்

“இருப்பினும் என்னுடைய கண்களில் வெற்றி – தோல்வி விகிதம் தான் முக்கியம். எனவே தரமசாலாவில் இந்த வாரத்தின் முடிவில் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக 3 – 2 என்ற ஸ்கோரை திரும்பப் பெற வேண்டும். ஆம் அவர்கள் தொடரை தோற்று விட்டனர். அவர்கள் 3 மற்றும் நான்காவது போட்டியின் மூன்றாவது நாட்களை தோல்விக்கு காரணமாக சுட்டிக் காட்டலாம். இருப்பினும் அங்கே அவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டனர்” என்று கூறினார்.

Advertisement