அதுக்காக ஃபோன் பண்ணேன் எடுக்கல.. கலாச்சார இல்லாதவர்.. 100வது போட்டிக்கு அஷ்வினை விமர்சித்த சிவராமகிருஷ்ணன்

L Sivaramakrishnan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலா நகரில் துவங்குகிறது. அதில் களமிறங்கும் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது போட்டியில் விளையாடும் 14வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைக்க உள்ளார். கடந்த 2011இல் அறிமுகமாகி அனுபவத்தால் முன்னேறிய அவர் இதுவரை 99 போட்டிகளில் 508* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்த காலகட்டங்களில் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் ஏராளமான சாதனைகளையும் படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். சொல்லப் போனால் ஸ்ரீனிவாசன் வெங்கட்ரராகவன், ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக் போன்ற இதற்கு முன் தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்காக விளையாடிய வீரர்கள் கூட 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:
இருப்பினும் தன்னுடைய திறமை மற்றும் அனுபவத்தால் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் தமிழ்நாடு வீரர் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் அஸ்வினுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 100வது போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் அழைத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனால் அதை அஸ்வின் எடுக்கவில்லை பதிலும் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த வகையில் கலாச்சாரம் தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே மரியாதை வரும் என்று அஸ்வினை விமர்சிக்கும் அவர் இதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “100வது போட்டியில் விளையாடும் அவரை வாழ்த்துவதற்காக சிலமுறை அழைத்தேன். அவர் என்னுடைய அழைப்பை துண்டித்தார். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் வரவில்லை. இது போன்ற மரியாதை தான் எங்களை போன்ற முன்னாள் வீரர்களுக்கு கிடைக்கிறது”

- Advertisement -

“கலாச்சாரம் தெரிந்த மக்களிடம் இருந்து மட்டுமே மரியாதை வரும். இதற்கு முன் நான் அவருடைய பவுலிங் ஆக்சனில் திருத்தம் செய்யுமாறு மட்டுமே ட்வீட் போட்டேன். விமர்சிக்கவில்லை” என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 2023 அக்டோபர் மாதம் முன்பாக சேதப்படுத்தப்பட்ட பிட்ச்சில் அஸ்வின் போன்ற எந்த முட்டாள் வேண்டுமானாலும் எளிதாக விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று சிவராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: முக்கியமான அந்த நேரத்துல புஜாராவும் அவரோட குடும்பமும் தான் அஷ்வினுக்கு ஹெல்ப் பண்ணாங்க – அஷ்வினின் மனைவி பகிர்வு

அத்துடன் அஸ்வின் மோசமான ஃபீல்டர் ஃபிட்னஸ் இல்லாத கிரிக்கெட்டர் என்பது உட்பட எல்லை மீறி அவர் மோசமாக விமர்சித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது 100வது போட்டியில் வாழ்த்துவதற்காக அழைத்தால் உங்களுடைய அழைப்பை அஸ்வின் ஏற்க வேண்டுமா? என்று சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் உங்களைப் போன்றவர்கள் வாழ்த்துவதை விட விமர்சிக்காமல் இருந்தாலே அஸ்வின் அசத்துவார் என்றும் தமிழக ரசிகர்கள் அவரை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement