முக்கியமான அந்த நேரத்துல புஜாராவும் அவரோட குடும்பமும் தான் அஷ்வினுக்கு ஹெல்ப் பண்ணாங்க – அஷ்வினின் மனைவி பகிர்வு

Ashwin-and-Pujara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற வேளையில் அந்தப் போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை பூர்த்தி செய்து அசத்தியிருந்தார். இருப்பினும் போட்டியின் பாதியிலேயே தனது தாயாரின் மோசமான உடல்நிலை காரணமாக வெளியேறினார்.

அதன் பின்னர் மீண்டும் தனது தாயின் உடல்நிலை முன்னேற்றம் பெற்ற பிறகு அவர் இந்திய அணியுடன் இணைந்து அந்த போட்டியில் வெற்றியையும் தேடித்தந்தார். இந்நிலையில் அவர் நாளை மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது போட்டியுடன் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது போட்டியில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது 100 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அஸ்வின் சந்தித்த இக்கட்டான நிலை குறித்து அவரின் மனைவி ப்ரீத்தி நாராயணன் சில நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடிக் கொண்டிருந்த போதுதான் எனது மாமியார் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் தான் இருந்தோம். அப்போது அம்மாவின் உடல்நிலை குறித்து அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். ஏனெனில் ராஜ்கோட்டில் இருந்து சென்னை வருவதற்கு சரியான விமான வழித்தடங்கள் கிடையாது. அதன் பின் உடனடியாக புஜாரா மற்றும் அவரது மனைவியின் உதவியை நாங்கள் நாடினோம்.

- Advertisement -

அவர்கள் உடனடியாக அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னைக்கு எப்படி விரைவாக வர முடியும் என்ற வழியை ஆராய்ந்து முடிவு செய்து கொடுத்தார்கள். அதன் பின்னரே அஸ்வினுக்கு நான் போன் செய்து மருத்துவர்கள் கூறியதை அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்ட அஸ்வின் மொத்தமாக உடைந்து விட்டார். சில நிமிடங்கள் பேசாமல் போனை கீழே வைத்து விட்டார். அதன் பின்னர் மீண்டும் அவரே எங்களுக்கு அழைத்து தான் வருவதாக கூறினார்.

இதையும் படிங்க : ரஞ்சி ட்ராபியை பற்றி எங்களுக்கும் தெரியும்.. தரம்சாலா பிட்ச் கண்டு பிடிச்சுட்டோம்.. ஜானி பேர்ஸ்டோ பேட்டி

அந்த நேரத்தில் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்து பிசிசிஐ என அனைவருக்கும் நன்றி ப்ரீத்தி நாராயணன் கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி தாயின் மருத்துவ அவசரத்திற்காக அஸ்வின் சென்னை சென்று இருந்தாலும் மீண்டும் அடுத்த நாளே இந்திய அணியுடன் இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement