ரஞ்சி ட்ராபியை பற்றி எங்களுக்கும் தெரியும்.. தரம்சாலா பிட்ச் கண்டு பிடிச்சுட்டோம்.. ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Johnny Bairstow
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்க உள்ளது. 5 போட்டியில் கொண்ட இந்த பெரிய தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அதற்கடுத்த 3 போட்டிகளில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ள இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.

மறுபுறம் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. இந்த நிலையில் தரம்சாலா நகரில் நடைபெற உள்ள கடைசிப் போட்டியில் வென்று இந்த தொடரை ஆறுதல் வெற்றியுடன் முடிப்பதற்கு இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

பிட்ச் எப்படி:
தரம்சாலா மைதானம் இந்தியாவின் மற்ற மைதானங்களை போல் அல்லாமல் பனிமலை சூழ்ந்த பிரதேசத்தில் இருப்பதால் மிகுந்த மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பது வழக்கமாகும். அந்த தட்பவெட்பம் இந்திய அணியை விட இங்கிலாந்து அணிக்கு தான் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதை போன்ற உணர்வைக் கொடுக்கும் என்றே சொல்லலாம்.

அது போன்ற சூழ்நிலையை பயன்படுத்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய பந்தை ஸ்விங் செய்து இந்தியாவுக்கு சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் கடைசி 2 நாட்களில் தரம்சாலா பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்து வருவதால் அதை பயன்படுத்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 2024 ரஞ்சிக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் இந்த போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளதை கண்டறிந்துள்ளதாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே தரம்சாலா மைதானத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பைகளை போட்டிகளை வைத்து இப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளதாக பேர்ஸ்டோ கூறியுள்ளார். இந்த அழகான மைதானத்தில் தன்னுடைய 100வது போட்டியை விளையாடுவது பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த உலகக் கோப்பையில் இருந்ததற்கு தற்போது தரம்சாலா மைதானத்தின் வெளிப்புற ஆடுகளத்தை உயர்தரமாக வடிவமைத்து மைதான பராமரிப்பாளர்கள் நல்ல வேலை செய்துள்ளனர்”

இதையும் படிங்க: 3 – 1ன்னு தோத்துட்டதா நினைக்காதீங்க.. அதுல நாங்க வேற லெவலில் முன்னேறிட்டோம்.. பென் ஸ்டோக்ஸ் பதிலடி

“100 போட்டிகளில் விளையாடுவது கடினம். ஒவ்வொரு குழந்தையும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பும். கடந்த மாதம் ரஞ்சித் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளது. அது நல்ல பிட்ச் போல தெரிகிறது. அதில் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல உதவியை பெறுவார்கள். அது இரு அணிகளுக்கும் சாதகமாக இருக்கலாம். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் எனக்கு பிடித்த மைதானங்களில் ஒன்று. ஆனால் தர்மசாலாவை விட உலகிலேயே மிகவும் அழகான மைதானம் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement