3 – 1ன்னு தோத்துட்டதா நினைக்காதீங்க.. அதுல நாங்க வேற லெவலில் முன்னேறிட்டோம்.. பென் ஸ்டோக்ஸ் பதிலடி

Ben Stokes 7
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 போல டெஸ்ட் அதிரடியாக விளையாடி 12 வருடங்கள் கழித்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்து அணியினர் எச்சரித்தனர். அதை முதல் போட்டியில் செய்தும் காட்டிய அந்த அணி ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சுதாரித்து விளையாடிய இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம் கடந்த 3 போட்டிகளில் முக்கியமான நேரங்களில் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாட மறுத்த இங்கிலாந்து அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.

- Advertisement -

டீம் வேற லெவல்:
அதனால் பஸ்பால் அணுகு முறையின் பவர் அவ்வளவு தானா? எங்கள் மண்ணில் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்று இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 – 1* என்ற கணக்கில் இத்தொடரில் தோல்வியை சந்தித்து விட்டோம் என்பதற்காக இங்கிலாந்து பின்னோக்கி நடக்கவில்லை என விமர்சனங்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன் இத்தொடரில் தோல்வியை சந்தித்தாலும் வருங்காலத்தில் மகத்தான வெற்றிகளை பெறுவதற்கு தேவையான அளவுக்கு இங்கிலாந்து வீரர்கள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் தொடரின் முடிவை மட்டும் வைத்து நாங்கள் பின்னோக்கி நடப்பதாக சொல்லலாம். ஆனால் நாங்கள் பின்னோக்கி நடக்கவில்லை”

- Advertisement -

“இந்த இந்திய சுற்றுப்பயணத்தில் எங்களுடைய தனி நபர் வீரர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளனர். உண்மையான முன்னேற்றம் எப்போதுமே முடிவுகளுடன் தன்னைக் காட்டிக் கொள்ளாது. இதற்கு முன் இங்கு தடுமாற்றமாக விளையாடிய வெளிநாட்டு அணிகளைப் போல் அல்லாமல் நாங்கள் இந்தியாவுக்கு இத்தொடரில் சவாலை கொடுத்தோம். எனவே இங்கிலாந்துக்காக விளையாடும் ஒவ்வொரு வாய்ப்பையும் ஸ்பெஷலாக நாங்கள் கருதுகிறோம்”

இதையும் படிங்க: இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்காதது குறித்து மனம்திறந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை தாண்டி இது தான் எங்களுடைய மனநிலையாகும். அதே சமயம் இந்த இடம் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமானது என்ற உண்மையையும் நீங்கள் எடுத்துச் முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெறும் கடைசி போட்டியில் வென்று இத்தொடரை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய இங்கிலாந்து போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement